நரசிங்கநத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நரசிங்கநத்தம், இந்தியாவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இந்த ஊர், செம்பனார் கோயில் வருவாய்த் தொகுதியைச் சேர்ந்தது.

கல்வி[தொகு]

இச்சிற்றூரில் ஒரு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

நரசிங்கநத்தத்திற்கு அருகிலுள்ள ஊர்களில் அமைந்துள்ள பள்ளிகள்:

இவ்வூரின் அருகே அமைந்துள்ள திருவிளையாட்டம், திருக்களாச்சேரி மற்றும் செம்பனார் கோவில் போன்ற ஊர்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன.

நரசிங்கநத்தத்திற்கு அருகிலுள்ள ஊர்களில் அமைந்துள்ள கல்லூரிகள்:

  1. ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னம்பந்தல்
  2. தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரம்
  3. ஞானாம்பிகை கலைக் கல்லூரி, தருமபுரம்
  4. TBML கல்லூரி, பொறையாறு
  5. ஏவிசி பொறியியல் கல்லூரி, மன்னம்பந்தல்
  6. அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, திருவாரூர்
  7. ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  8. ஏவிசி பல்தொழில்நுட்பக் கல்லூரி, மன்னம்பந்தல்

கோவில்கள்:[தொகு]

இங்கு அருள்மிகு சுயம்புநாதசுவாமி திருக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது (செம்பொனார்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ.).

மற்றவை:[தொகு]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நரசிங்கநத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை பற்றிய விவரத்திற்கு [1] இங்கே செல்க.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்கநத்தம்&oldid=1247963" இருந்து மீள்விக்கப்பட்டது