உள்ளடக்கத்துக்குச் செல்

நரகத்தீ கணவாய்

ஆள்கூறுகள்: 14°21′10″N 98°57′17″E / 14.35278°N 98.95472°E / 14.35278; 98.95472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரகத்தீ கணவாய்
ช่องเขาขาด
நரகத்தீ கணவாய் - ஒரு பகுதி
நரகத்தீ கணவாய் is located in தாய்லாந்து
நரகத்தீ கணவாய்
தாய்லாந்து, காஞ்சனபுரி, நரகத்தீ கணவாய்
நிறுவப்பட்டது1942; நினைவிடம்: 24 ஏப்ரல் 1996
அமைவிடம்காஞ்சனபுரி, தாய்லாந்து
ஆள்கூற்று14°21′10″N 98°57′17″E / 14.35278°N 98.95472°E / 14.35278; 98.95472
வகைபோர்க்கால நினைவுச் சின்னம்
மேற்பார்வையாளர்ஆஸ்திரேலிய போர் கல்லறைகளின் அலுவலகம்/ அரச தாய்லாந்து ஆயுதப்படை

நரகத்தீ கணவாய் என்பது (ஆங்கிலம்: Hellfire Pass); தாய்லாந்து, காஞ்சனபுரி மாநிலத்தில், அமைந்துள்ள ஒரு போர்க்கால நினைவுச் சின்னம் ஆகும். பர்மா இரயில்பாதை (Burma Railway); அல்லது மரண இரயில்பாதை (Death Railway); என அழைக்கப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway) அமைக்கப்படும் போது, ஒரு மலைக் குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட கணவாய் தான், இப்போது ஒரு போர்க்கால நினைவுச் சின்னமாகத் திகழ்கின்றது.[1][2]

தாய்லாந்தின் காஞ்சனாபுரி மாநிலத்தில் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்து இருந்த டெனாசெரிம் மலைக் குன்று தான் (Tenasserim Hills) இப்போது வரலாறு படைக்கின்றது. அந்தக் குன்றைக் குடைந்து பாதை அமைக்கும் போது ஜப்பானியர்களின் சித்திரவதைகளினால் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். கணிசமான அளவிற்கு மலாயா தமிழர்களும் பலியாகி உள்ளனர்.

இந்த நரகத்தீ கணவாய், நாம் டோக் சாய் யோக் நொய் (Nam Tok Sai Yok Noi) இரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

வரலாறு

[தொகு]
2006-ஆம் ஆண்டில் நரகத்தீ கணவாய்
நரகத்தீ கணவாய்

1942-ஆம் ஆண்டில், இந்தக் கணவாய் அமைக்கும் பணியில் ஆஸ்திரேலியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், போர்க் கைதிகள், சீனர்கள், மலாய்க்காரர்கள், தமிழர்கள் போன்றோர் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கட்டுமானத்தின் போது போர்க் கைதிகளும் தொழிலாளர்களும் கொடுமையான சித்ரவதைகள் அனுபவித்தனர். அதிகமான உயிர் இழப்புகள். அதனால் அந்தக் கணவாய்க்கு நரகத்தீ கணவாய் என பெயர் வந்தது.

68 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்

[தொகு]

தவிர, உடல் மெலிந்து நலிந்து போன போர்க் கைதிகளும்; ஆசியத் தொழிலாளர்களும், கைவிளக்குகளைப் பயன்படுத்தி உழைக்கும் காட்சி நரகத்தின் காட்சிகள் போல அமைந்து இருந்ததால் எல்பயர் பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

பன்னிரன்டு வாரங்களில் பாறையைக் குடைந்து பாதை அமைக்கும் வேலை முடிந்தது. இருப்பினும் அந்தக் காலக் கட்டத்தில் ஜப்பானிய, கொரியக் காவலர்களால் 68 பேர் அடித்துக் கொல்லப் பட்டனர். அதில் சிலர் காலரா, வயிற்றுப்போக்கு, பட்டினி, உணவில்லாமையால் இறந்து போயினர்.[3]

இருப்பினும் இந்தப் பணியில் 400 பேர் இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. போர்க்கைதிகள் 69 பேர்; எஞ்சியவர்கள் மலாயாவில் இருந்து கொன்டு செல்லப்பட்டவர்கள் என்றும் சான்றுகள் கிடைத்து உள்ளன.[4]

நரக வேதனைகள்

[தொகு]

பர்மா-சயாம் இரயில்பாதை கட்டுமானத்தில் [5]) எல்பையர் கணவாய் எனும் நரகத்தீ கணவாய் பகுதிதான் மிகவும் கடினமான பகுதியாகக் கருதப்படுகிறது. பெரும் பாறைகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நரகத்தீ கணவாய் பகுதி காடுகளின் மிக மிக உள்பகுதியில் இருந்தது. அத்துடன் கட்டுமான உபகரணங்களின் பற்றாக்குறை காரணத்தினாலும் வேலைகள் தாமதம் ஆயின.[6]

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தில் 330,000 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106,000 பேர் இறந்து போயினர்.[7]

இந்த சயாம் பர்மா இரயில் பாதை அமைப்பதற்காக மலேசியாவில் இருந்து 120,000 தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களில் ஏறக்குறைய 12,000 பேர் மட்டுமே மலேசியாவுக்கு திரும்பி வந்து இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. மிகுதி 118,000 தமிழர்களும் தாய்லாந்து, பர்மா மரணக் குழிகளுக்குள் மௌனமாகி விட்டார்கள்.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • The Japanese Thrust — Australia in the War of 1939–1945, Lionel Wigmore, AWM, Canberra, 1957.
  • Authenticated Records from Japanese POW camps along the Thai-Burmese railway 1942–45, second floor, Research library, Thai-Burma Railway Centre, Kanchanaburi, Thailand, 2008.
  • Prisoners of the Japanese - POWs of World War II in the Pacific, Gavan Daws

மேற்கோள்கள்

[தொகு]
  1. China Williams, Aaron Anderson, Brett Atkinson, Becca Blond, Tim Bewer (2007). Thailand. Lonely Planet. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-307-5.
  2. "Hellfire Pass Museum". Hellfire Pass Tours. Archived from the original on 14 August 2010. பார்க்கப்பட்ட நாள் 30 August 2010.
  3. "Railway of Death: Images of the construction of the Burma–Thailand Railway 1942–1943". Archived from the original on 2010-09-22. பார்க்கப்பட்ட நாள் 28 ஜனவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Parliament of Australia". parlinfo.aph.gov.au. 18 November 1996.
  5. Hellfire Pass is the name of a railway cutting on the former "Death Railway" in Thailand which was built with forced labour during the Second World War.
  6. "Based upon report originally produced from comprehensive details compiled by Capt D. Nelson (SSVF) B.R.E on 23 Aug 45". Archived from the original on 2012-01-29. பார்க்கப்பட்ட நாள் 2012-01-27.
  7. "The Death Railway cost in lives was 16,000 allied troops and over 100,000 Asians, later it was said 'for every railway sleeper laid a life was lost'". Archived from the original on 2012-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரகத்தீ_கணவாய்&oldid=3560085" இலிருந்து மீள்விக்கப்பட்டது