நயீம் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயீம் அசன்

முகமது நயீம் ஹசன் (Mohammad Nayeem Hasan பிறப்பு: டிசம்பர் 2, 2000 ஒரு வங்காள தேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேசத்துக்கு துடுப்பாட்ட அணிக்காக இதுவரை இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2017 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2017 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் வங்காளதேச அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 356 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 274 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி , வங்காளதேச அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். [1] அக்டோபர் 10, 2015 அன்று 2016–17 ஆம் ஆண்டிற்கான தேசிய துடுப்பாட்ட லீக்கில் இவர் சிட்டகாங் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார் . அப்போது இவருக்கு வயது பதினேழு ஆண்டுகள் 356 நாட்கள். முதல் போட்டியில் முதல் ஆட்ட பகுதியில் ஐந்து விளக்குகளை கைப்பற்றினார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் ஐந்து இலக்குகளை கைப்பற்றிய வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[3][4]

உள்ளூர் துடுப்பாட்ட போட்டி[தொகு]

2017–18 வங்காளதேச பிரீமியர் லீக்கில் 29 நவம்பர் 2017 அன்று சிட்டகாங் வைக்கிங் துடுப்பாட்ட அணிக்காக இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். [5]

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்கா லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் காசி துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 23 இலக்குகளை கைப்பற்றி அதிக இலக்குகளை கைப்பற்றிய காசி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[6]

அக்டோபர் 2018 இல், 2018–19 தேசிய கிரிக்கெட் லீக்கில், டாக்கா துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஆட்டப் பகுதியில் எட்டு இலக்குகளை வீழ்த்தினார். [7] [8] இவர் 2018–19 தேசிய கிரிக்கெட் லீக்கில் ஆறு போட்டிகளில் இருபத்தெட்டு இலக்குகளைக் கைப்பற்றி அதிக இழப்புகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார் . [9]

2018–19 வங்காளதேச பிரீமியர் லீக்கிற்கான வரைவு பட்டியலில் இடம் பெற்றததனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், சிட்டகாங் வைக்கிங்ஸ் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். [10] டிசம்பர் 2018 இல், 2018–19 வங்காளதேச துடுப்பாட்ட லீக்கின் இறுதி சுற்று போட்டிகளில், மத்திய மண்டலத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இரண்டாவது ஆட்ட பகுதியில் 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எட்டு இலக்குகளை வீழ்த்தினார். [11] ஆகஸ்ட் 2019 இல், வங்காளதேச துடுப்பாட்ட வாரிய 35 வீரர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த வாரியம் அறிவிப்பு 35 வீரர்களில் ஒருவராக இருந்தார். [12]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் 19 வயதிற்குட்பட்ட வங்காளதேச அணி சார்பாக இவர் விளையாடினார். சனவரி மாதம் 2019 இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[13] [14]

குறிப்புகள்[தொகு]

 1. "Nayeem Hasan". ESPN Cricinfo. 6 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 2. "National Cricket League, Tier 2: Sylhet Division v Chittagong Division at Chittagong, Jan 3-6, 2017". ESPN Cricinfo. 6 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. "A happy homecoming for 17-year old Nayeem Hasan". ESPN Cricinfo. 23 November 2018. 23 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "1st Test: Bangladesh take 133-run lead vs West Indies as 17 wickets tumble on Day 2". India Today. 23 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. "33rd match, Bangladesh Premier League at Chittagong, Nov 29 2017". ESPN Cricinfo. 29 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Dhaka Premier Division Cricket League, 2017/18: Gazi Group Cricketers". ESPN Cricinfo. 5 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Young spinner Nayeem sizzles with eight-for in NCL". Dhaka Tribune. 22 October 2018. 22 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. "NCL: Top-order batsmen boost Khulna's day1 total 281/7* vs Rajshahi". United News Bangladesh. 22 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. "National Cricket League, 2018/19: Most wickets". ESPN Cricinfo. 8 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. 28 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Nayeem 10-for, Mominul, Yasir Ali tons give East Zone massive win". ESPN Cricinfo. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Mohammad Naim, Yeasin Arafat, Saif Hassan - A look into Bangladesh's future". ESPN Cricinfo. 17 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Saif Hassan likely to lead Bangladesh U-19 at World Cup". ESPN Cricinfo. 6 December 2017. 6 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Bangladesh pick uncapped Nayeem Hasan for first Sri Lanka Test". 26 January 2018. http://www.espncricinfo.com/story/_/id/22218738/bangladesh-pick-uncapped-nayeem-hasan-first-sri-lanka-test. பார்த்த நாள்: 26 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயீம்_அசன்&oldid=3528289" இருந்து மீள்விக்கப்பட்டது