நயாகிரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய வேளண்மை இயக்கம் (New Agriculture Movement) வங்காளதேச நாட்டில் மேற்கத்திய பூச்சிக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பாட்டை எதிர்த்து நடைபெறும் ஓர் இயக்கமாகும். வங்காள மொழியில் இவ்வியக்கத்தை நயாகிரிசி என்று அழைக்கிறார்கள்.[1]

பூச்சிக்கொல்லிகள் மற்றும் நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்தி பயிர்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு ஆளாக நேரிடும் என்ற நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. [2]

உடல்நலக் கவலைகளுக்கு மேலதிகமாக, நயாகிரிசி இயக்கம் கரிம வேளாண்மையையும் களைகளாகக் கருதப்படும் தாவரங்களின் உணவு மற்றும் விலங்கு தீவனத்திற்கான பயன்பாட்டையும் வலுவாக ஊக்குவிக்கிறது.[3] மேலும் இவ்வியக்கம் தன்னிறைவை மேம்படுத்துவதாகவும், மேற்கத்திய மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வங்காளதேசத்தை விலக்குவதாகவும் கருதப்படுகிறது. [4]

பெண்களை ஆதரிப்பதில் நயாகிரிசி இயக்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. ஏழை பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கால்நடைகளை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துகிறது. கன்று ஈனும் வரை ஒரு பசு அக்குடும்பத்தில் இருக்கும். பின்னர் பசு மற்றொரு குடும்பத்திற்கு அனுப்பப்படும்.[3] உள்ளூர் பயிர் வகைகளிலிருந்து விதைகளை சேகரிக்க மகளிர் விதை வலையமைப்பும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. [4]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangladesh: the seeds of change". 
  2. Rothenberg, David (2005). Writing the world: on globalization. MIT Press. பக். 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-262-18245-4. 
  3. 3.0 3.1 "To measure poverty, you may have to go chak". The Hindu Business Line. 27 September 2007. http://www.thehindubusinessline.com/2007/09/27/stories/2007092750650900.htm. பார்த்த நாள்: 2009-04-23. "To measure poverty, you may have to go chak". The Hindu Business Line. 27 September 2007. Retrieved 2009-04-23.
  4. 4.0 4.1 Reed, Ananya Mukherjee (2008). Human Development and Social Power: Perspectives from South Asia. Taylor & Francis. பக். 129–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-77552-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாகிரிசி&oldid=3538593" இலிருந்து மீள்விக்கப்பட்டது