நம்ரதா சிரோத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்ரதா சிரோத்கர்
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு22 சனவரி 1972 (1972-01-22) (அகவை 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில்
 • நடிகை
 • வடிவழகி
செயல் ஆண்டுகள்1993–2002; 2022
பட்ட(ம்)ங்கள்பெமினா இந்திய அழகி 1993
பெமினா இந்திய அழகி
Spouse
Children2

நம்ரதா சிரோத்கர் (Namrata Shirodkar)(பிறப்பு: சனவரி 22, 1972) என்பவர் முன்னாள் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.[1] இவர் 1993-ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.

கச்சே தாகே (1999), எழுபுன்னா தரகன் (1999), வாஸ்தவ்: தி ரியாலிட்டி (1999) மற்றும் புகார் (2000) போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இதற்காக இவர் பன்னாட்டு இந்தியத் திரைப்பட நிறுவன சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[2] அஸ்தித்வா (2000), தில் வில் பியார் வியார் (2002), எல். ஓ. சி. கார்கில் (2003), மற்றும் அண்ட் ப்ரெஜுடிஸ் (2004), இது வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் வெற்றிகரமாக ஓடியது.[3] இவர் 2005-ல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை மணந்தார்.[4]

இளமை[தொகு]

நம்ரதா சிரோத்கர் 22 சனவரி 1972 அன்று கோவா வம்சாவளியைச் சேர்ந்த மகாராட்டிர குடும்பத்தில் பிறந்தார்.[5][1][6] இவர் நடிகை சில்பா சிரோத்கரின் மூத்த சகோதரி[7] மற்றும் பிரம்மச்சாரி (1938) படத்தில் நடித்த பிரபலமான மராத்தி நடிகை மீனாட்சி சிரோத்கரின் பேத்தி ஆவார்.[8][6]

வடிவழகி தொழில்[தொகு]

சிரோத்கர் ஒரு வடிவழகியாக பணிபுரிந்தார். மேலும் 1993-ல் இந்திய அழகிப் பட்டம் பெற்றார்.[9] பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு, இவர் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.

நடிப்பு வாழ்க்கை[தொகு]

நம்ரதா 1977ஆம் ஆண்டு ஷீரடி கே சாய் பாபா திரைப்படத்தில் சத்ருகன் சின்காவுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.[10]

சிரோத்கரின் முதல் படம் புரப் கி லைலா பச்சிம் கி சாய்லாவாக இருந்தது. இதில் அக்சஷய் குமார் மற்றும் சுனில் செட்டி ஆகியோர் முன்னணியிலிருந்தனர். இப்படத்திற்கு நதீம் சரவன் இசையமைத்தார். இந்தப் படம் வெளியாகவே இல்லை. இவரது ஓய்வுக்குப் பிறகு திரைப்படம் முடிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் ஹலோ இந்தியா என மாற்றப்பட்டது. ஆனால் இதுவும் இன்னும் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. சிரோத்கர் சல்மான் கான் மற்றும் டுவிங்கிள் கன்னாவுடன் ஜப் பியார் கிசிஸே ஹோதா ஹை (1998) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் வாஸ்தவ் மற்றும் கச்சே தாகே (இரண்டும் 1999) ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இவர் பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையானார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2000 ஆம் ஆண்டில், சிரோத்கர் தெலுங்கு திரைப்படத்துறை நடிகர் மகேஷ் பாபுவை வம்சி திரைப்படத்தின் தளத்தில் சந்தித்தார். படப்பிடிப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே இவர்கள் குலாவுதல் செய்ய ஆரம்பித்தனர்.[12] இவர்கள் 10 பிப்ரவரி 2005 அன்று மேரியட் மும்பை ஜூஹுவில் அத்தடு படப்பிடிப்பின் போது திருமணம் செய்து கொண்டனர். சிரோத்கர் தற்போது தனது கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.[13] இத்தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[4][14]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Happy Birthday Namrata Shirodkar: Her journey from Miss India Universe 1993 to becoming the wife of southern superstar Mahesh Babu". News18. 1 March 2015. 23 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Happy Birthday Namrata Shirodkar: 5 lesser-known facts about the evergreen actress that you need to know" (in en). The Times of India. 22 January 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/happy-birthday-namrata-shirodkar-5-lesser-known-facts-about-the-evergreen-actress-that-you-need-to-know/photostory/80398543.cms. 
 3. Pais, Arthur J. (14 October 2004). "Has Bride & Prejudice topped the UK charts?". Rediff. https://www.rediff.com/movies/2004/oct/14bp.htm. 
 4. 4.0 4.1 Kavirayani, Suresh (22 July 2012). "Mahesh Babu names his daughter Sitara". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Mahesh-Babu-names-his-daughter-Sitara/articleshow/15077305.cms. 
 5. "Namrata Shirodkar and Mahesh Babu: Love story in pics" (in en). India Today. 22 January 2020. https://www.indiatoday.in/movies/photo/namrata-shirodkar-and-mahesh-babu-love-story-in-pics-1639074-2020-01-22. 
 6. 6.0 6.1 Sumit, Rajguru (22 April 2018). "Bollywood's Forgotten Stars: 10 Unknown facts about Mahesh Babu's wife and actress – Namrata Shirodkar" (in en). Free Press Journal. https://www.freepressjournal.in/cmcm/bollywoods-forgotten-stars-10-unknown-facts-about-mahesh-babus-wife-and-actress-namrata-shirodkar. 
 7. "Namrata Shirodkar - Jeena Isi Ka Naam Hai Indian Award Winning Talk Show - Zee Tv Hindi Serial" (இந்தி). Zee Tv. 15 February 2020 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக. Time 9:22 - 10:14
 8. "Veteran Marathi actress dead". Express India. 4 June 1997. 30 December 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Miss India Winners 2010-1964". The Times of India. 5 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Happy Birthday Namrata Shirodkar: 5 adorable pictures with her hubby Mahesh Babu" (in en). The Times of India. 22 January 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/happy-birthday-namrata-shirodkar-5-adorable-pictures-with-her-hubby-mahesh-babu/photostory/67638653.cms. 
 11. "Vaastav is a hit!". Box Office India. 12 July 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Mahesh and Namrata dating!". indiaglitz.com. 10 மார்ச் 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Namrata Shirodkar marries Mahesh Babu". indiaglitz.com. 10 மார்ச் 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Mahesh Babu becomes daddy!". sify.com. 29 December 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2006 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ரதா_சிரோத்கர்&oldid=3689000" இருந்து மீள்விக்கப்பட்டது