நம்போர் வனவிலங்கு சரணாலயம்
| நம்போர் வனவிலங்கு சரணாலயம் Nambor Wildlife Sanctuary | |
|---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
| அமைவிடம் | அசாம், இந்தியா |
| அருகாமை நகரம் | திபு |
| ஆள்கூறுகள் | 26°23′43″N 93°52′57″E / 26.39528°N 93.88250°E[1] |
| பரப்பளவு | 37 km2 (14 sq mi) |
| நிறுவப்பட்டது | 27 சூலை 2000 |
| நிருவாக அமைப்பு | அசாம் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை |
நம்போர் வனவிலங்கு சரணாலயம் (Nambor Wildlife Sanctuary) என்பது இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த வனவிலங்கு சரணாலயம் 37 சதுர கிலோமீட்டர் (14 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] இப்பகுதி 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கோலாகாட்டு மாவட்டத்தில் இருந்து 25 கிமீ (16 மைல்) தொலைவிலும், காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து 65 கிமீ (40 மைல்) தொலைவிலும் இச்சரணாலம் அமைந்துள்ளது.[3][4] கர்பி ஆங்கலாங்கின் கரம்பானி வனவிலங்கு சரணாலயம் கோலாகாட்டு மாவட்டத்தின் நம்போர்-தோய்குருங்கு வனவிலங்கு காப்பகத்துடன் இணைந்து ஒரு பெரிய வனப்பகுதியை உருவாக்குகிறது. இந்த சரணாலயத்திற்கான முன்மொழிவு 1993 ஆண்டில் செய்யப்பட்டது.[5]
பல்லுயிர்ப் பன்முகத்தன்மை
[தொகு]தாவரங்கள்
[தொகு]பெலு, கோமாரி, அச்சார், நாகோர், உதியம், போமா, பொன்சம் போன்றவை இங்கு காணப்படுகின்றன.[3] 51 அரிய மந்தாரை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
பாலூட்டிகள்
[தொகு]சீன எறும்புண்ணி, பெரிய தேவாங்கு, குட்டைவால் குரங்கு, பன்றி வால் மந்தி, அசாம் குரங்கு, செம்முகக் குரங்கு, தொப்பித்தலை குரங்கு, ஊலக் கிப்பான், புலி, சிறுத்தை, படைச்சிறுத்தை, சிறுத்தைப் பூனை, மீன்பிடிப் பூனை, காட்டுப்பூனை, யானை, கேளையாடு, கடமான், காட்டுப்பன்றி, இந்தியக் காட்டெருது, பெரிய கருப்பு அணில் மற்றும் தூரிகைவால் முள்ளம்பன்றி ஆகியவை இச்சரணாலயத்தில் உள்ள விலங்குகளாகும். [6]
பறவைகள்.
[தொகு]வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு, மெலிந்த அலகு கழுகு, வெள்ளை-கன்னமுள்ள மலை பார்ட்ரிட்ச்சு, சாம்பல்நிற மயில் காட்டுக்கோழி, நீலவால் காட்டுக் கோழி, சிவப்புக் காட்டுக்கோழி, வெள்ளை இறக்கை மர வாத்து, பெரிய பச்சைப் புறா, மலை இருவாட்சி, வெள்ளை-கருப்பு இருவாச்சி, வளைந்த-அலகு இருவாச்சி, கிராகுலா ஆகிய பறவை இனங்கள் இங்கு காணப்படும் சில குறிப்பிடத்தக்க இனங்களாகும்.[7]
ஊர்வன
[தொகு]பர்மிய பாறை மலைப்பாம்பு, இராச நாகம் மற்றும் உடும்பு ஆகியவை இங்குள்ள ஊர்வன விலங்குகளாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Garampani & Nambor Wildlife Sanctuaries". Wikimapia.org. Retrieved 2013-06-17.
- ↑ "Wildlife Sanctuaries in Assam, National parks of Assam". Mapsofindia.com. 2013-04-05. Retrieved 2013-06-17.
- 1 2 "Nambor Wildlife Sanctuary". Vedanti.com. 2000-07-27. Archived from the original on 4 March 2016. Retrieved 2013-06-17.
- ↑ ":: Wildlife in India :: [Nambor Wildlife Sanctuary]". Wildlifeinindia.in. Archived from the original on 4 March 2016. Retrieved 2013-06-17.
- ↑ Choudhury, A.U. (1993). A naturalist in Karbi Anglong. Gibbon Books
- ↑ Choudhury, A.U. (2013). The mammals of North East India. Gibbon Books & Rhino Foundation with support from COA, Taiwan. Pp. 432.
- ↑ Choudhury, A.U. (2000). The birds of Assam. Gibbon Books & WWF-India. Pp. 240.
வெளி இணைப்புகள்
[தொகு]- நம்போர் வனவிலங்கு சரணாலயம் assaminfo.com.
- நம்போர் வனவிலங்கு சரணாலயம் wildlifeinindia.in.