நம்பிக்கைச் சிலை
விசுவாசு சுவரூபம் | |
| ஆள்கூறுகள் | 24°55′08″N 73°49′04″E / 24.9190°N 73.8178°E |
|---|---|
| இடம் | கணேசு தேக்ரி, நாத்துவாரா, இராசத்தான், இந்தியா |
| கட்டமைத்தவர் | சாப்பூர்ச்சி பல்லோஞ்சி நிறுவனம் |
| கட்டுமானப் பொருள் | எஃகுச் சட்டம், காங்கிரீட்டு மற்றும் பித்தளைப் பூச்சு மூலம் வலுவூட்டப்பட்டது. வெங்கலச் சிலை |
| உயரம் | 369 அடிகள் (112 m) |
| துவங்கிய நாள் | ஏப்ரல் 2013[1] |
| முடிவுற்ற நாள் | 17 ஆகத்து 2019 |
| திறக்கப்பட்ட நாள் | 29 அக்டோபர் 2022 |
| அர்ப்பணிப்பு | சிவன் |
| இணையதளம் | www |
நம்பிக்கைச் சிலை (Statue of Belief) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாரா நகரத்தில் நிறுவப்பட்டுள்ள, இந்து சமயக் கடவுளான சிவபெருமானின் சிலையாகும். விசுவாசத்தின் சிலை என்ற பெயராலும் இச்சிலை அறியப்படுகிறது. இது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான சிவபெருமான் சிலையாகவும், உலகளவில் நான்காவது மிக உயரமான சிலையாகவும் திகழ்கிறது.[2]
விளக்கம்
[தொகு]சிவன், கால்களை மடக்கி அமர்ந்த நிலையில், இடது கையில் திரிசூலத்தை பிடித்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளார். சிவனின் இடது பாதம், வலது காலின் முழங்காலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அவரது முகபாவனை பற்றற்ற, தியான நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.[3] இந்தச் சிலைக்கு தனித்துவமான செப்பு நிறத் தோற்றம் உள்ளது. சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை முழுமையாகக் காண இரண்டு பார்வை இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைக்கான வடிவமைப்பு 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பமாகி, 2020 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. முழுச் சிலையின் உயரம் 369 அடிகளாகும். (112 மீட்டர்); அதன் மேடையின் உயரம் 110 அடிகள் (34 மீட்டர்) ஆகும்.[4] இந்தச் சிலையை 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலிருந்தும் காண முடியும்.[5]
இந்தச் சிலையின் உள் பகுதியில் ஒரு கண்காட்சி அரங்கமும், மேலும் 20 அடி (6.1 மீ), 110 அடி (34 மீ), மற்றும் 270 அடி (82 மீ) உயரங்களில் மின்தூக்கி மூலம் செல்லக்கூடிய பொதுப் பார்வைக் காட்சியகங்களும் உள்ளன.[6] இந்த அமைப்பில், சிவனின் காளையான நந்தியின் சிலையும் இடம்பெற்றுள்ளது. நந்தியின் உயரம் 25 அடி (7.6 மீ) மற்றும் நீளம் 37 அடி (11 மீ) ஆகும்.[7] 16 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், மூன்று மூலிகைத் தோட்டங்கள், உணவகம் பகுதி, லேசர் நீரூற்று, கைவினைப் பொருள் கடைகள் அமைந்த பகுதி, பார்வை மேடைகள், இசை நீரூற்றுகள், நினைவுப் பொருள் கடைகள் மற்றும் ஒரு குளம் ஆகியவையும் உள்ளன. மேலும், விரைவான உள்ளூர் சுற்றுலாவுக்காக இங்கு ஒரு சிறிய இரயிலும் இயக்கப்படுகிறது.[8]
கட்டுமானம்
[தொகு]இந்தச் சிலை, இந்திய தொழிலதிபரான மதன்பலிவாலால் கருத்தாக்கப்பட்டது; சிற்பி மூர்த்திகர் நரேசு குமாவத்து வடிவமைத்தார்.[9] சாபூர்ச்சி பல்லோஞ்சி நிறுவனம் இதைக் கட்டியது. இந்த அமைப்பு, இரும்புக் கம்பிகளால் பலப்படுத்தப்பட்ட சிமெண்டு காங்கிரீட்டு உள் சுவர்களைக் கொண்ட மையப்பகுதியை அடிப்படையாகக் கொண்டது. அதைச் சுற்றி கட்டமைப்பு எஃகு வடிவமைப்பு அமைக்கப்பட்டு, அதன் வெளியே மிக உயர்தர செயல்திறன் கொண்ட காங்கிரீட்டால் வடிவமைக்கப்பட்ட வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, இதன் மேற்பரப்பில் திரவ வடிவிலான துத்தநாகம் தெளிக்கப்பட்டு, பின்னர் செம்பு பூச்சு பூசப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chowdhary, Charu. "Statue of Belief in Nathdwara Will Soon be Open For Public Viewing | India.com" (in en). www.india.com. https://www.india.com/travel/articles/statue-of-belief-in-nathdwara-will-soon-be-open-for-public-viewing-3726738/.
- ↑ "World's tallest Shiva statue to be inaugurated in Rajasthan". The Economic Times. 27 November 2022. https://economictimes.indiatimes.com/news/india/worlds-tallest-shiva-statue-to-be-inaugurated-in-rajasthan/articleshow/95160636.cms.
- ↑ "World's tallest Shiva statue to be inaugurated in Rajasthan". zeebiz.com. 29 October 2022. Retrieved 2022-11-28.
- ↑ "Statue of Belief: World's tallest Lord Shiva statue expected to be completed by August" (in en). www.timesnownews.com. https://www.timesnownews.com/the-buzz/article/statue-of-belief-worlds-tallest-lord-shiva-statue-expected-to-be-completed-by-august/427447.
- ↑ "Largest statue of Lord Shiva to be inaugurated in Rajasthan this March, 2019" (in en). Times of India Travel. 4 March 2019. https://timesofindia.indiatimes.com/travel/destinations/largest-statue-of-lord-shiva-to-be-inaugurated-in-rajasthan-this-march-2019/as66951535.cms.
- ↑ "Lord Shiva statue likely to be inaugurated by January" (in hi). udaipurtimes.com. 12 November 2020. https://udaipurtimes.com/news/lord-shiva-statue-likely-to-be-inaugurated-by-january/cid1750616.htm.
- ↑ Koladra, Pankaj (25 November 2020). "Statue of Belief: World's tallest Lord Shiva Statue | Yatradham.Org". YatraDham. Archived from the original on 31 October 2022. Retrieved 24 April 2022.
- ↑ "World's tallest Shiva statue to be inaugurated in Rajasthan". economictimes.indiatimes.com. 29 October 2022. https://economictimes.indiatimes.com/news/india/worlds-tallest-shiva-statue-to-be-inaugurated-in-rajasthan/articleshow/95160636.cms.
- ↑ "Shiva Statue at Nathdwara, Rajasthan" (in en-gb). www.nbmcw.com (New Building Materials & Construction World) (October 2020). https://www.nbmcw.com/article-report/case-studies-site-reports/shiva-statue-at-nathdwara-rajasthan.html.