நம்பாலக்கோட்டை சிவன் கோவில்
தோற்றம்
நம்பாலக்கோட்டை சிவன் கோவில் என்பது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் நம்பாலக்கோட்டை ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1] நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயில் எனவும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. மூலவர் பெட்டராயசுவாமி அல்லது வேட்டைக்காரன் என்று அழைக்கப்படுகிறார். நிலம்பூர் கோவிலக ஐமீன் பரம்பரையினரால் இக்கோவில் கட்டப்பட்டது. மண்டாடன் செட்டி சமூக மக்களின் வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்கி வருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் இடதுபுறம் திரும்பினால் இந்த கோவிலை சென்றடையலாம்.