நம்தாபா பறக்கும் அணில்
| நம்தாபா பறக்கும் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பிசுவாமோயோப்டெரசு |
| இனம்: | பி. பிசுவாசி |
| இருசொற் பெயரீடு | |
| பிசுவாமோயோப்டெரசு பிசுவாசி சாகா, 1981 | |
நம்தாபா பறக்கும் அணில் (பிசுவாமோயோப்டெரசு பிசுவாசி) என்பது வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படும் ஒரு பறக்கும் அணில் ஆகும். இது 1981ஆம் ஆண்டு நம்தாபா தேசிய பூங்காவில் சேகரிக்கப்பட்ட ஒற்றை விலங்கியல் மாதிரியிலிருந்து அறியப்படுகிறது.
விளக்கம்
[தொகு]நம்தாபா பறக்கும் அணில் சிவப்பு நிறத்தில், நரைத்த உரோமங்களைக் கொண்டுள்ளது. மேலே வெள்ளை நிறமும், வெளிர் சாம்பல் நிற கொண்டையும் கொண்டது. இதன் தோற்செட்டை ஆரஞ்சு நிறத்திலும், அதன் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். இதன் கன்னப் பற்கள் எளிமையானவை. மேலும் இதன் வெட்டுப்பற்கள் நிறமியற்றவை. இடைச்சுவர் செவிப்புலன் புல்லேவில் பலவாகவும், சில சமயங்களில் தேன்கூடு வடிவமாகவும், 10 முதல் 12 உயிரணுக்கள் வரை இருக்கும். இது தலை முதல் குதம் வரை 40.5 செ. மீ. நீளமும், 60 செ. மீ. நீளமுடைய நீண்ட வாலினையும், 7.8 செ.மீ. பின்னங்கால்களையும் கொண்டுள்ளது. இதன் காது 4.6 செ.மீ. நீண்டது.[2][3]
வகைப்பாட்டியல்
[தொகு]நம்தாபா பறக்கும் அணில் முதன்முதலில் 1981இல் விவரிக்கப்பட்டது. இது நம்தாபா தேசிய பூங்காவில் சேகரிக்கப்பட்ட ஒரு விலங்கியல் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இதன் அறிவியல் பெயர் இந்திய விலங்கியல் ஆய்வின் இயக்குனர் பிசுவாமோய் பிசுவாசுவை நினைவுகூர்கிறது.[4] பிசுவாமோயோப்டெரசு பேரினத்தின் முதல் உறுப்பினர். இது 2013இல் லாவோசியன் இராட்சத பறக்கும் அணில் (பிசுவாமோயோப்டெரசு லாவோன்சிசு) விவரிக்கப்பட்டது.[5] 2018-இல், சீனாவில் ஒரு புதிய பறக்கும் அணில், மவுண்ட் கயோலிகாங் பறக்கும் அணில் (பிசுவாமோயோப்டெரசு கயோலிகோன்சிசு) கண்டுபிடிக்கப்பட்டது.[6]
பரவலும் வாழிடமும்
[தொகு]நம்தாபா பறக்கும் அணில் வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது உயரமாக வளரும், நாகமரமான மெசுவா பெரியா காடுகளில் வாழ்கிறது. பெரும்பாலும்திகிங் நதியின் வடிகால் படுகைப் பகுதியில் உள்ள மலைச் சரிவுகளில், குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் பட்காய் மலைத்தொடரின் மேற்கு சரிவில் காணப்படுகிறது.[7][8]
ஏப்ரல் 2022இல், அருணாச்சலப் பிரதேசத்தில் நம்பத்தகுந்த நம்தாபா பறக்கும் அணில் பதிவு செய்யப்பட்டது.[9] இதன் நம்பகத்தன்மையினை நிரூபிக்க, ஆராய்ச்சியாளர்கள் டி. என். ஏ.வை அடையாளம் காண மல மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.[10]
காப்பு நிலை
[தொகு]நம்தாபா பறக்கும் அணில் பன்னாட்டு ஒன்றிய இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனமாக நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் எல்லை ஒரு பள்ளத்தாக்கில் மட்டுமே இருக்கலாம். மேலும் பூங்காவிற்குள் உணவுக்காக விலங்குகள் இவற்றை வேட்டையாடுவதாலும், வாழ்விட அழிவாலும் இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. இது காடுகளில் "தொலைந்த உயிரினங்களைத் தேடுதல்" முயற்சியின் மையமாக இருக்கும் 25 "மிகவும் தேடப்படும் தொலைந்து போன" சிற்றினங்களில் ஒன்றாகும்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S. (2017). "Biswamoyopterus biswasi". IUCN Red List of Threatened Species 2016: e.T2816A115063959. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2816A22271554.en. https://www.iucnredlist.org/species/2816/115063959.
- ↑ Saha, S. S. (1981). "A new genus and a new species of flying squirrel (Mammalia: Rodentia: Sciuridae) from northeastern India". Bulletin of the Zoological Survey of India 4 (3): 331–336. http://faunaofindia.nic.in/PDFVolumes/bulletin/004/03/0331-0336.pdf.
- ↑ Saha, S. S. (1985). "Mammalia". Records of the Zoological Survey of India 82 (1–4): 321–330. doi:10.26515/rzsi/v82/i1-4/1984/161306. http://faunaofindia.nic.in/PDFVolumes/records/082/01-04/0321-0329.pdf.
- ↑ Saha, S. S. (1981). "A new genus and a new species of flying squirrel (Mammalia: Rodentia: Sciuridae) from northeastern India". Bulletin of the Zoological Survey of India 4 (3): 331–336. http://faunaofindia.nic.in/PDFVolumes/bulletin/004/03/0331-0336.pdf.
- ↑ Sanamxay, D.; Douangboubpha, B.; Bumrungsri, S.; Xayavong, S.; Xayaphet, V.; Satasook, C.; Bates, P. J.J. (2013). "Rediscovery of Biswamoyopterus (Mammalia: Rodentia: Sciuridae: Pteromyini) in Asia, with the description of a new species from Lao PDR". Zootaxa 3686 (4): 471–481. doi:10.11646/zootaxa.3686.4.5. பப்மெட்:26473234.
- ↑ Gutoskey, E. (2019). "Humongous, chihuahua-sized species of flying squirrel has been discovered in China". www.mentalfloss.com. Retrieved September 21, 2022.
- ↑ Saha, S. S. (1981). "A new genus and a new species of flying squirrel (Mammalia: Rodentia: Sciuridae) from northeastern India". Bulletin of the Zoological Survey of India 4 (3): 331–336. http://faunaofindia.nic.in/PDFVolumes/bulletin/004/03/0331-0336.pdf.
- ↑ Saha, S. S. (1985). "Mammalia". Records of the Zoological Survey of India 82 (1–4): 321–330. doi:10.26515/rzsi/v82/i1-4/1984/161306. http://faunaofindia.nic.in/PDFVolumes/records/082/01-04/0321-0329.pdf.
- ↑ .
- ↑ Daniel, E. (2023). "This flying squirrel is still lost to science, but maybe not for much longer". Re:wild. Retrieved 2023-12-29.
- ↑ "The Search for Lost Species". Global Wildlife Conservation. https://www.lostspecies.org.