நமீபியா பொருளாதார கொள்கை ஆராய்ச்சி அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமீபியா பொருளாதார கொள்கை ஆராய்ச்சி அலகு (Namibia Economic Policy Research Unit) என்பது நமீபிய நாட்டில் செயல்படும் ஓர் அரசு சாரா அமைப்பாகும். "பொருளாதார கொள்கை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் நமீபியாவின் தேசிய வளர்ச்சி இலக்குகளை ஆதரித்தல், பொருளாதார ஆராய்ச்சியை நடத்துதல் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி திறனை வளர்த்தல் போன்றவை இதன் நோக்கங்கள் என்றூ இவ்வமைப்பின் இணையதளம் தெரிவிக்கிறது. இவ்விணையதளம் தற்பொழுது அணைவரி நிலையில் முடக்கப்பட்டுள்ளது.[1] நமீபியா சுதந்திரம் அடைந்தபோது 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நமீபியா பொருளாதார கொள்கை ஆராய்ச்சி அலகு நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.[2] 20 ஆண்டு கால தொடர் செயல்பாட்டில் இந்த அலகு பரந்த அளவிலான ஆலோசனை அறிக்கைகளை உருவாக்கியது. பன்னாட்டுக் கூட்டுறவு உறுப்பினர்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. NEPRU: Home பரணிடப்பட்டது 2008-11-16 at the வந்தவழி இயந்திரம்
  2. The Namibian, 1 Nov 2011
  3. "NEPRU: About Us". Archived from the original on 2007-12-26. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.