நமது நெல்லைக் காப்போம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நமது நெல்லைக் காப்போம் என்பது இந்தியாவில் பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வகை விதை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அதை ஊக்குவிக்கும் ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகளை செயற்படுத்தி வருகிறது.[1]

விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக இவர்கள் அரிய விதை நெல்களைக் சேகரித்து அதில் இருந்து விவசாயிகளுக்கு 2கிகி நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிகி ஆக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.[2]

நமது நெல்லைக் காப்போம் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் கட்டிமேடு ஜெயராமன் ஆவார்.[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்
  2. விதை நெல்லைக் காப்போம்
  3. வி.தேவதாசன் (20171 பெப்ரவரி 26). "169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்". செய்தி கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 26 பெப்ரவரி 2017.