நபிமுசைட்டு
| நபிமுசைட்டு Nabimusaite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | சிலிக்கேட்டு கனிமம், நெசோசிலிக்கேட்டு |
| வேதி வாய்பாடு | KCa12(SiO4)4(SO4)2O2F |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது |
| படிக அமைப்பு | முக்கோணம் |
| பிளப்பு | (001), தெளிவற்றது |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 |
| மிளிர்வு | பளபளப்பு |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| அடர்த்தி | 3.12 (கணக்கிடப்பட்டது) (தோராயமானது) |
| ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nω=1.64, nε=1.64 (தோராயமானது) |
| மேற்கோள்கள் | [1][2] |
நபிமுசைட்டு (Nabimusaite) என்பது KCa12(SiO4)4(SO4)2O2F.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரிய கனிமமான இதன் கட்டமைப்பு ஒத்த அராடைட்டு மற்றும் சாடோவைட்டு கனிமங்களின் கட்டமைப்பைப் போலவே, அட்ரூரிம் உருவாக்க வழிப்பெறுதியாகும். நபிமுசைட்டு கனிமம் இதன் பெயரை நபிமுசைட்டு கனிமக் குழுவிற்கு வழங்குகிறது.[3] இயற்கையான வெப்ப உருமாற்றத்திற்குப் பெயர் பெற்ற தளமான அட்ருரிம் உருவாக்கத்தின் வெப்ப உருமாறிய பாறையில் இந்த கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. சல்பேட்டு நிறைந்த உருகலுடன் ஒரு முன்னோடி கனிமக் கூட்டத்தின் தொடர்பு காரணமாக நபிமுசைட்டு உருவாகியதாக விளக்கப்படுகிறது.[1] தார்கெயிட்டு கனிமத்தின் பொட்டாசியம் மற்றும் புளோரின் ஒப்புமையாக நபிமுசைட்டு கருதப்படுகிறது.[4]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நபிமுசைட்டு கனிமத்தை Nbm[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தொடர்புகள்
[தொகு]வெப்ப உருமாற்றத்தின் காரணமாக உருவான ஒரு பாறையில், இலார்ணைட்டு மற்றும் எயீலிமைட்டு ஆகியவற்றால் ஆன முடிச்சுகளில் நபிமுசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[1]
வேதியியல்
[தொகு]நபிமுசைட்டில் பாசுபரசு கலவை கலந்திருப்பதால் இது தூய்மையற்றதாகும்.[1]
படிகக் கட்டமைப்பு
[தொகு]நபிமுசைட்டின் படிகக் கட்டமைப்பு மட்டுத்தன்மை கொண்டது. இது எதிர்பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு வகையைச் சேர்ந்ததாகும். எண்முக ஆட்ரூரைட்டு தொகுதிகள் [Ca12(SiO4)4O2F]3+ கொண்ட எதிர்மின் அயனிகளும் [K(SO4)2]3 தொகுதிகள் கொண்ட நான்முகி ஒருங்கிணைப்பில் உள்ள நேர்மின் அயனிகளும் சேர்ந்து இக்கட்டமைப்பு உருவாகிறது. இரண்டு தொகுதிகளும் ஒன்றோடொன்று இடைச்செருகலாக இணைக்கப்பட்டுள்ளன.[1]
தோற்றம்
[தொகு]பொட்டாசியம் மற்றும் சல்பேட்டு நிறைந்த ஓர் உருகல், முந்தைய கனிமங்களுடன் (எல்லெசுடாடைட்டு மற்றும் இலார்ணைட்டு) வினைபுரிவதால் நபிமுசைட் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 Galuskin, E.V., Gfeller, F., Armbruster, T., Galuskina, I.O., Vapnik, Y., Murashko, M., Włodyka, R., and Dzierżanowski, P., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part I. Nabimusaite, KCa12(SiO4)4(SO4)2O2F, from larnite rocks of Jabel Harmun, Palestinian Autonomy, Israel. Mineralogical Magazine 79(5), 1061-1072
- ↑ "Nabimusaite: Nabimusaite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-02.
- ↑ "Nabimusaite: Nabimusaite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-02.
- ↑ "Nabimusaite: Nabimusaite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-02.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.