நபிசு பாத்திமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஃபிஸ் பாத்திமா

நபிசு பாத்திமா (Nafis Fathima)(பிறப்பு 6 ஏப்ரல் 1963) என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும்[1] கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி.[2] இவர் இரண்டு முறை கர்நாடக புற்றுநோய் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[3][4][5] 1999 முதல் 2002 வரை கர்நாடகப் பிரதேச காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார்.[6]

நபிசு பாத்திமா ராய்ச்சூர் மற்றும் பெங்களூருவில் உள்ள, கர்நாடகா வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை வாரிய உறுப்பினராகவும் கர்நாடகா மாநில தொழில்துறை வங்கி நிறுவன துணைத் தலைவராகவும், தூர்தர்ஷன் திட்டக் குழு உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் தெற்கு ரயில்வே, ஆலோசனைக் குழு உறுப்பினர், அகில இந்திய வானொலி, மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[7][8]

தனிப்பட்ட தகவல்[தொகு]

நபிசு பாத்திமா பெங்களூரில் பிறந்தார். நிஜலிங்கப்பா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தனது இளம் அறிவியல் படிப்பினை முடித்தார். இக்கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்தார். பின்னர் அரசியல் அறிவியலைத் தனது பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.

நபிசு பாத்திமா 9 சனவரி 1983-ல் நூர் அகமது செரீப்பை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Syndicate Members | Bangalore University". bangaloreuniversity.ac.in. 22 July 2014. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  2. "Karnataka Congress condemns arrest of suspended IPS officer Sanjeev Bhatt". Newstrack India (ANI). 3 October 2011.
  3. "Elected". தி இந்து Bangalore, 9 November 2011.
  4. Karnataka Cancer Society பரணிடப்பட்டது 2020-02-17 at the வந்தவழி இயந்திரம் website
  5. Indian National Congress[தொடர்பிழந்த இணைப்பு] website.
  6. Karnataka Pradesh Congress Committee website
  7. "UAS panel to grill professor". The Hindu. 4 September 2010.
  8. University of Agriculture Sciences, Bangalore. Official website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபிசு_பாத்திமா&oldid=3741902" இலிருந்து மீள்விக்கப்பட்டது