உள்ளடக்கத்துக்குச் செல்

நபா நடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
నభా నటేష్
பிறப்பு1995/1996 (அகவை 28–29)[1]
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை

நபா நடேஷ் (Nabha Natesh) ஓர் இந்திய நடிகையாவார். இவர் குறிப்பாக தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் தோன்றி வருகிறார்.[2] [3] வஜ்ரகயா (2015), என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் இணையாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.[4] [5] ஊடகங்களாலும் தெலுங்குத் திரையுலகிலும் இவர் பிரபலமாக ஸ்மார்ட் பியூட்டி என்று குறிப்பிடப்படுகிறார். [6] [7]

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

நபா, தனது சொந்த ஊரான சிருங்கேரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் கர்நாடகாவின் உடுப்பியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் படித்தார். தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரகாஷ் பெலவாடியின் கீழ் நாடகங்களில் நடிப்பதோடு விளம்பர மாதிரியாகவும் தொடங்கினார். நன்கு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞரான இவர் பள்ளியிலும் கல்லூரி நாட்களிலும் பல போட்டிகளில் நடனமாடியுள்ளார். பெமினா மிஸ் இந்தியா பெங்களூர் 2013 என்ற போட்டியின் முதல் 11 பேர் பட்டியலில் ஒருவராக இருந்தார். மேலும், மிஸ் இன்டெலக்சுவல் விருதையும் பெற்றார். அபிநய தரங்காவில் நடிப்பு பயிற்சி பெற்ற இவரது நாடக வாழ்க்கை பிரகாஷ் பெலவாடியின் கீழ் தொடங்கியது.[8]

தொழில்

[தொகு]

இவர் தனது 19வது வயதில்[9] கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருக்கு இணையாக நடித்தார். இவரது நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான வஜ்ரகயா திரைப்படம் கர்நாடகாவில் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் திரையிடப்பட்டது.[10] [11] [12] [13] [14] நபா விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சன மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் நாபாவின் நடிப்பைப் பாராட்டினர்.[15][16][17][18] மேலும் இவர், கன்னடத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [19]

2017இல், சுமந்த் ஷைலேந்திராவுக்கு இணையாக லீ என்ற படத்தில் நடித்தார். அதே ஆண்டில் சஹேபா படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் தோன்றினார்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rs 1.2 crore massive set for Ravi Teja's 'Disco Raja'! Nabha Natesh to join shoot - Times of India". The Times of India.
  2. "Payal Rajput set to romance Ravi Teja along with Nabha Natesh? - Times of India". The Times of India.
  3. "It's a Kannada girl for Ganesh! - Times of India". The Times of India.
  4. "Who is Nabha Natesh? Here's What We Know About The Famous Actor" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. https://m.timesofindia.com/entertainment/telugu/movies/news/in-pics-quarantine-life-of-ismart-beauty-nabha-natesh/photostory/76568658.cms
  7. https://telugu.asianetnews.com/gallery/entertainment/ismart-beauty-nabha-natesh-latest-hot-photos-fans-fidaa-arj-qs5yww
  8. "In PICS: Quarantine life of 'iSmart' beauty Nabha Natesh". The Times of India (in ஆங்கிலம்). 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  9. "53-year-old Shivarajkumar to romance a teenager". 11 August 2014. Archived from the original on 19 June 2015. Shivarajkumar, who recently turned 53, is all set to romance a 19 year old heroine in his latest film Vajrakaya
  10. "Blend of action and emotion – The Hindu". 14 June 2015. http://www.thehindu.com/news/national/karnataka/blend-of-action-and-emotion/article7313946.ece. 
  11. "Creativity is still far behind in Kannada cinema – The Hindu". 18 June 2015. http://www.thehindu.com/features/friday-review/creativity-is-still-far-behind/article7329492.ece. 
  12. "Vajrakaya's Mega Audio Launch – The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.
  13. "Shivarajkumar with 3 women! – The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.
  14. "100 days of training for 30-day shoot". Bangalore Mirror.
  15. "Movie Review 'Vajrakaya': A film more 'natural' than 'supernatural'". www.deccanchronicle.com.
  16. Vajrakaya Movie Review {4/5}: Critic Review of Vajrakaya by Times of India https://m.timesofindia.com/entertainment/kannada/movie-reviews/Vajrakaya/amp_movie_review/47646302.cms
  17. Review : Vajrakaya (2015) http://www.sify.com/movies/vajrakaya-review-kannada-pgolQMccehcbg.html#.W6oeaIcPhgE.whatsapp பரணிடப்பட்டது 2015-06-14 at the வந்தவழி இயந்திரம்
  18. "Vajrakaya review. Vajrakaya Kannada movie review, story, rating". IndiaGlitz.com.
  19. https://www.timesofindia.com/entertainment/kannada/movies/news/Filmfare-South-Awards-nominee-list/amp_articleshow/52783032.cms[தொடர்பிழந்த இணைப்பு]
  20. "Lee Movie Review, Trailer, & Show timings at Times of India Mobile". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்

[தொகு]
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நபா நடேஷ் 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபா_நடேஷ்&oldid=3753693" இலிருந்து மீள்விக்கப்பட்டது