நபரங்குபூர்
நபரங்குபூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நபரங்குபூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°14′N 82°33′E / 19.23°N 82.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | நபரங்குபூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நபரங்குபூர் நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 557 m (1,827 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,945 |
மொழி | |
• அலுவல் மொழி | ஒடியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764059 |
தொலைபேசி குறியீடு | 06858 |
வாகனப் பதிவு | OD 24 |
இணையதளம் | https://nabarangpur.odisha.gov.in/ |
நபரங்குபூர் (Nabarangpur), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்குபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம், மாநிலத் தலைநகரான புவனேஸ்வரத்திற்கு தென்மேற்கே 517 கிலோ மீட்டர் தொலைவிலும். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜெகதல்பூருக்கு தென்மேற்கே 71.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆந்திராவின் விஜயநகரததிற்கு வடமேற்கில் 205 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு சுற்றிய பகுதிகளில் சோளம் அதிக அளவில் விளைகிறது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 557 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 20 வார்டுகளும், 8,716 குடியிருப்புகளும் கொண்ட நபரங்குபூர் நகரத்தின் மக்கள் தொகை 36,945 ஆகும். அதில் 18,483 ஆண்கள் மற்றும் 18,462 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 999 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.4% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,048 மற்றும் 5,060 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 80.38%, இசுலாமியர் 3.91%, சமணர்கள் 0.38% , கிறித்தவர்கள் 13.92 மற்றும் பிற சமயத்தினர் 1.40 % வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]நபரங்குபூர் தொடருந்து நிலையம்[2]சத்தீஸ்கரின் மாநிலத்தின் ஜெகதல்பூர் மற்றும் ஆந்திராவின் விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களை இணைக்கிறது.