நபநீதா தேவ் சென்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ நபநீத தேவ் சென் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
நபநீதா தேவ் சென் নবনীতা দেবসেন | |
---|---|
பிறப்பு | 13 சனவரி 1938 கொல்கத்தா |
இறப்பு | 7 நவம்பர் 2019 (அகவை 81) கொல்கத்தா |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர் |
வாழ்க்கைத் துணை/கள் | அமர்த்தியா சென் |
விருதுகள் | Sahitya Akademi Award in Bengali |
நபநீதா தேவ் சென் (ஆங்கிலம்: Nabaneeta Dev Sen) (நபோனிடா டெப் சென்) (13 ஜனவரி 1938 - 7 நவம்பர் 2019) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். கலை மற்றும் ஒப்பீட்டு இலக்கியங்களைப் படித்த பிறகு, அவர் அமெரிக்காவிற்குச் சென்று மேலும் படித்தார். அவர் இந்தியா திரும்பி பல பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். அதே போல் இலக்கிய நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கவிதை, புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனம், தனிப்பட்ட கட்டுரைகள், பயணக் குறிப்புகள், நகைச்சுவை கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்றவை. வங்காள மொழியில் 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2000 ஆமாவது ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் 1999 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது .
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]தேவ் சென் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) 1938 சனவரி 13 இல் ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். கவிஞர்-இணையான நரேந்திர தேவ் மற்றும் இராதராணி தேவி ஆகியோரின் ஒரே குழந்தையாவார். அபராஜிதா தேவி என்ற புனைப் பெயரில் எழுதி வந்தார்.[1][2] ஒப்பீட்டு இலக்கியத் துறையின் தொடக்கத் தொகுதி மாணவராக இருந்தார். அங்கிருந்து 1958இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] இவருக்கு இரவீந்திரநாத் தாகூர் பெயர் சூட்டியுள்ளார்.
இவரது குழந்தை பருவ அனுபவங்களில் இரண்டாம் உலகப் போரின் வான்வழித் தாக்குதல்கள், 1943 ஆம் ஆண்டு வங்காள பஞ்சத்தில் மக்கள் பட்டினி கிடப்பதைக் கண்டது, மற்றும் இந்தியா பிரிந்த பின்னர் கொல்கத்தாவுக்கு ஏராளமான அகதிகள் வந்ததன் தாக்கம் ஆகியவை அடங்கும்.[4] அவர் கோகலே நினைவு பெண்கள் பள்ளி மற்றும் லேடி பிராபோர்ன் கல்லூரியில் பயின்றார் .
கல்கத்தாவின் மாநிலக் பல்கலைக்கழகத்தில்,[2][5] ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத் துறையின் தொடக்கத் தொகுதி மாணவராக இருந்தார். அங்கிருந்து 1958இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] அவர் 1961இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் மற்றொரு முதுகலைப் பட்டம் (முதலிடம்) பெற்றார். 1964 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1959ஆம் ஆண்டில், இவர் பொருளாதார வல்லுனரும் கல்வியாளரும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராக பணியிலிருந்தவரும், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசு வழங்கப்பட்டவருமான அமர்த்தியா சென் என்பவரை மணந்தார்.[6] அவர் அவருடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார் அவர்கள் அந்தாரா தேவ் சென் மற்றும் நந்தனா சென் என்ற இரண்டு மகள்களின் பெற்றோரானார்கள். பின்னர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்ஹாம் கல்லூரி ஆகியவற்றில் தனது பிந்தைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.[7]
1976இல் விவாகரத்து பெற்ற பிறகு, இவர் தனது மகள்களுடன் கல்கத்தா திரும்பினார்.[6][8] இவரது பொழுதுபோக்குகளில் வாசிப்பு, பதிவுகள் மற்றும் பயணம் ஆகியவை அடங்கும். பெங்காலி மற்றும் ஆங்கிலம் தவிர, இந்தி, ஒரியா, அசாமி, பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் எபிரேய மொழியையும் இவரால் படிக்க முடிந்தது.[9]
தொழில்
[தொகு]தேவ் சென் அமெரிக்காவில் உள்ள இயாடோ மற்றும் மெக்டொவல் காலனி,இத்தாலியில் பெல்லாஜியோ, எருசலேமில் மிஷ்கெனோட் ஷானானிம்உட்பட பல சர்வதேச கலைஞர்களின் காலனிகளில் வசித்த எழுத்தாளராக இருந்தார்.[10]
அவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இராதாகிருஷ்ணன் நினைவு சொற்பொழிவுத் தொடரை (1996-1997) காவியக் கவிதை என்றத் தலைப்பில் வழங்கினார்.[7]
ஆர்வர்ட், கார்னெல், கொலம்பியா, சிகாகோ (அமெரிக்கா), ஆம்போல்ட் (ஜெர்மனி), டொராண்டோ பல்கலைக்கழகங்கள், பிரித்தன் கொலம்பியா (கனடா), மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), எல் கொலெஜியோ டி மெக்சிகோ மற்றும் பல பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும், வருகை படைப்பாற்றல் எழுத்தாளராகவும் இருந்தார். .[7]
அங்கீகாரம்
[தொகு]தேவ் சென் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் கௌரவங்களை பெற்றுள்ளார். அவற்றுள்: கௌரிதேவி நினைவு விருது, மகாதேவி வர்மா விருது (1992), இராக்பெல்லர் அறக்கட்டளையின் செல்லி விருது (1993), பீகார் பாகல்பூர் பல்கலைக்கழகத்தின் சரத் விருது (1994), பிரசாத் புரஸ்காரம், சாகித்ய அகாதமி விருது (1999),[11] இரவீந்திர புரஸ்காரம், கபீர் சம்மன், சமசுகிருதி விருது,[7] கமல் குமாரி தேசிய விருது (2004),[12] மிஸ்டிக் கலிங்க இலக்கிய விருது (2017),[13] மற்றும் 2017இல் குழந்தைகள் இலக்கியத்திற்கான பெரிய சிறிய புத்தகங்களில் பெங்காலி எழுத்தில் கவனம் செலுத்தியபோது கிடைத்த விருது போன்றவைகள் அடங்கும். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ (2000) வழங்கி கௌரவித்தது.[14]
இறப்பு
[தொகு]இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கொல்கத்தாவில் 2019 நவம்பர் 7 அன்று இறந்தார்.[15][16]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Nabaneeta Dev Sen, Padma Shri Award Winning Poet, Dies In Kolkata". News Nation. 7 November 2019. https://www.newsnation.in/cities/kolkata/nabanita-deb-sen-padmashree-award-winning-poet-dies-in-kolkata-243412.html. பார்த்த நாள்: 9 November 2019.
- ↑ 2.0 2.1
{{cite book}}
: Empty citation (help) - ↑ 3.0 3.1 .
- ↑ Panth, Sirshendu (8 November 2019). "Tribute to Nabaneeta: 'A voice that spoke of the dilemma of Bengal's so-called intellectuals'". The New Indian Express Indulge. https://www.indulgexpress.com/culture/books/2019/nov/08/tribute-to-nabaneeta-a-voice-that-spoke-of-the-dilemma-of-bengals-so-called-intellectuals-19659.html. பார்த்த நாள்: 9 November 2019.
- ↑ "Nabaneeta Dev Sen, Padma Shri Award Winning Poet, Dies In Kolkata". https://www.newsnation.in/cities/kolkata/nabanita-deb-sen-padmashree-award-winning-poet-dies-in-kolkata-243412.html.
- ↑ 6.0 6.1 Parabaas Inc. "Nabaneeta Nabaneeta Dev Sen – Biographical Sketch [Parabaas Translation]". Parabaas.com. Archived from the original on 29 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Nabaneeta Nabaneeta Dev Sen Bookshelf". The South Asian Women's NETwork. Archived from the original on 6 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2 April 2011.
- ↑ Mukherjee, P Jhimli (8 July 2017). "Old writers learn new tricks". The Times of India. Archived from the original on 24 July 2017. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ "Nabaneeta Dev Sen's last journey: From JU to Bangla Academi". 9 November 2019. https://indianexpress.com/article/cities/kolkata/nabaneeta-dev-sen-last-journey-from-ju-to-bangla-academi-6110977/. பார்த்த நாள்: 9 November 2019.
- ↑ Māthura, Divyā (2003). Aashaa: Hope/faith/trust : Short Stories by Indian Women Writers Translated from Hindi and Other Indian Languages. New Delhi: Star Publications, for Indian Book Shelf, London, England. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176500753. பார்க்கப்பட்ட நாள் 9 November 2019.
- ↑ "Nabaneeta Nabaneeta Dev Sen – Bengali Writer: The South Asian Literary Recordings Project (Library of Congress New Delhi Office)". Loc.gov. 13 January 1938. Archived from the original on 26 October 2012. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012.
- ↑ "Kamal Kumari National Awards Presented". Guwahati: High beam. 2 April 2006. Archived from the original on 2 November 2012.
- ↑ "Arundhathi Subramaniam, Nabaneeta Sen, Soubhagya Mishra honoured with first Mystic Kalinga Literary Awards". Bhubaneswar: Times of India. 23 December 2017. Archived from the original on 24 May 2018. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ "Padma Shri Awards from West Bengal". Sensonmedia.net. Archived from the original on 23 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012.
- ↑ Staff, Scroll. "Poet and novelist Nabaneeta Dev Sen dies in Kolkata at 81". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ Chakraborty, Ajanta (7 November 2019). "Padma Shri awardee writer Nabaneeta Dev Sen passes away". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் நபநீதா தேவ் சென் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.