நன்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றா என்பது ஒரு குன்று. சேரமன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை என்பானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பதிற்றுப்பத்து ஏழாம்பத்து இந்தச் சேரன்மீது கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த சேரன் கபிலருக்குப் பரிசாக “நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் பட்ட நாடெல்லாம் காட்டிக், கொடுத்தான்”.[1]

செல்வக்கடுங்கோ வாழியாதன் இந்தக் குன்றின்மீது ஏறி நின்றுதான் தன் கண்ணிலும், புலவர் கண்ணிலும் பட்ட ஊர்களையெல்லாம் புலவர்க்குக் கொடையாக வழங்கினான். மற்றும் சிறுபுறம் என்று என்று சொல்லி நூறாயிரம் (1,00,000) காணம் செல்வமும் கபிலருக்கு இக்கடுங்கோ வழங்கினான். இக்காலத்தில் பழனி எனப் போற்றப்படும் முருகன் குன்றம் சங்ககாலத்தில் பொதினி எனப் போற்றப்பட்டது.[2] இங்குள்ள பொதினி நகரைத் தலைநகராக வைத்துக்கொண்டு முருகன் என்னும் மன்னனும், பேகன் என்னும் வள்ளலும் சங்ககாலத்தில் ஆண்டுவந்துள்ளனர். இவர்கள் ஆவியர் குடியைச் சேர்ந்தவர்கள். ஆயர்குடியினர் ஆவியர் எனவும் வழங்கப்பட்டனர். பழனி மலை ஆவினன்குடி எனப் போற்றப்படுவதும் இதனாலேயே.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பதிற்றுப்பத்து பதிகம் 7
  2. அகநானூறு 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றா&oldid=2565080" இலிருந்து மீள்விக்கப்பட்டது