நன்னூற்காண்டிகையுரை (கூழங்கைத் தம்பிரான்)
Appearance
(நன்னூற்காண்டிகையுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நன்னூற்காண்டிகையுரை என்பது கூழங்கைத் தம்பிரான் ஆல் 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலுக்கான உரை ஆகும். நீண்டகாலமாக கிடைக்காமல் இருந்த இந்த நூல் 1980 காலப்பகுதியில் பிரித்தானிய நூலகத்தில் கையெழுத்துப் பிரதியாக பேராசிரியர் அ. தாமோதரன் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, யேர்மனியின் ஹைடெல்பர்க் பல்கலைக்கழக ஆதரவுடன் அவரால் பதிப்பிக்கப்பட்டது.[1] ஈழத்து உரைமரபில் கிடைக்கப்பெற்ற முதல் படைப்புகளில் ஒன்றாக இந்த உரை கருதப்படுகின்றது. [2]
இந்த உரை நூல் நன்னூலுக்கு முதல் உரை நூலாகக் கருதப்படும், மயிலைநாதர் உரையை எளிமைப்படுத்தி அமைந்துள்ளது. இந்த உரை கூழங்கைத் தம்பிரான் ஆல் உரைக்கப்பெற்று, அவரது மாணவர் ஒருவரால் எழுதப்பட்டு இருக்கலாம் என்று பதிப்பாசிரியர் அ. தாமோதரன் அவர்களும், நூலின் மதிப்புரை ஆசிரியர் ஆ. சிவலிங்கனார் அவர்களும் ஊகிக்கின்றனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நன்னூல் உரை நூல்கள்". tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2016.
- ↑ காலநிதி எஸ். சிவலிங்கராஜா (2004). ஈழத்து தமிழ் உரைமரபு. குமரன் புத்தக இல்லம்.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ ஆ. சிவலிங்கனார் (June 1981). "நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் புத்தகத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புரை விபரம்". உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். Archived from the original on 2016-04-05. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2016.