உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னீர் பச்சைப்பாசித் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்னீர் பச்சைப்பாசித் தொகுதி
Chara globularis
Chara globularis
Scientific classificationEdit this classification
(வகைப்படுத்தா): [[பசுந்தாவரக் கிளை]]
(வகைப்படுத்தா): Charophyta
Migula 1897,[1]sensu Leliaert et al. 2012
Groups included
  • Mesostigmatophyceae
  • Chlorokybophyceae
  • Streptofilum
  • Klebsormidiophyceae
  • Phragmoplastophyta
    • Charophyceae
    • Coleochaetophyceae
    • Zygnematophyceae
Cladistically included but traditionally excluded taxa

நன்னீர் பச்சைப்பாசித் தொகுதி (Charophyta) என்பது நன்னீரில் வளரும்[2] பச்சை பாசிகளின் முக்கியப் பிரிவாகும். இவை நிலத் தாவரங்களின் (Embryophytes) மிக நெருங்கிய தாவரவகையாகக் கருதப்படுவதால், தாவரவியலிலும், அது சார்ந்த பரிணாம ஆய்வுகளில் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தொகுதியின் வருவன, நிலவாழ் தாவரங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றன.[3] இவை பல செல் அமைப்பைக் கொண்டவை. இவற்றின் உடல் அமைப்பு பார்ப்பதற்குத் தண்டும், இலைகளும் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். 'காரோ' (Chara) மற்றும் 'நிடெல்லா' (Nitella) ஆகியவை இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். நிலத் தாவரங்களைப் போலவே, இவை செல் பிரிவின் போது 'ஃபிராக்மோபிளாஸ்ட்' (Phragmoplast) என்ற அமைப்பை உருவாக்குகின்றன. மேலும், இவற்றில் குளோரோபில் a, b நிறமிகள் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்கள் பெரும்பாலும் ஏரிகள், குளங்கள் போன்ற தேங்கிய நன்னீர் நிலைகளில் காணப்படுகின்றன. சில இனங்கள் சுண்ணாம்பு படிவுகளை உருவாக்குவதால், இவை 'கல்பாசிகள்' (Stoneworts) என்றும் அழைக்கப்படுகின்றன.

இனப்பெருக்கம்

[தொகு]

இத்தொகுதியன் இனப்பெருக்கம் இரண்டு முக்கிய முறைகளில் நடைபெறுகின்றன.

  1. உடல்வழி இனப்பெருக்கம்: இது மாவுச்சத்து செறிந்த அமிலோஸ்டார்ஸ் (Amylum stars) மற்றும் கிழங்குகள் (Tubers) மூலம் நிகழ்கிறது.
  2. பாலின இனப்பெருக்கம்: இது மிகவும் மேம்பட்ட 'ஊகாமஸ்' (Oogamous) வகையைச் சார்ந்தது ஆகும். இதில் 'குளோபியூல்' (Globule) என்ற ஆண் உறுப்பும், கொட்டை (Nucule) என்ற பெண் உறுப்பும் தனித்துவமானதும், சிக்கலான உறுப்புகளை உருவாக்கி இனப்பெருக்கம் நிகழ்த்துகின்றன.

கருவுறுதலுக்குப் பிறகு, இவை தடிமனான சுவருடைய 'ஊசுபோர்' (Oospore) நிலையை அடைகின்றன; இச்சுவர் பாதகமான சூழலையும் தாங்கி வளர உதவுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guiry, M.D.; Guiry, G.M. "Charophytes". AlgaeBase. University of Galway. Retrieved 2022-02-21.
  2. "Charophyta An overview". sciencedirect. Retrieved 18 சனவரி 2026.
  3. "Charophyta – General Characteristics, Occurrence, Morphology, Cell Structure And Life-cycle of Chara". biologynotesonline. Retrieved 18 சனவரி 2026.