நன்னியம்பலம்
Appearance
நன்னியம்பலம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.
இந்திய விடுதலைப் போராட்டம்
[தொகு]வேலு நாச்சியார் திருப்பத்தூர் படைக்கு நன்னி அம்பலம் மற்றும் சேதுபதி அம்பலம் என்ற கள்ளர் தலைவர்களை தலைமை ஏற்கச் செய்தும், காளையார் கோவில் படைப்பிரிவிற்கு மருது சகோதரர்களைத் தலைமை ஏற்கச் செய்தார்.[1][2] நன்னியம்பலம் தலைமையில் மூவாயிரம் படை வீரர்கள் எட்டுப் பீரங்கிகளுடன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றினர்.[3] வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் அமர இவர் முக்கிய பங்காற்றினார்.
"நன்னிப்படை காட்டினில் வந்து வழிமறித்து கடிந்து பொரலுற்றார் பொறும்போது நன்னி புகழுவான்" என்று திடமாய்ச் இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 215 ல் குறிப்பிடப்படுகிறது.