நந்நாகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்வழுதியார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு [1] இவர் இசை அமைத்துப் பாடியுள்ளார். இவர் அப்பாடலுக்கு வகுத்த சங்ககால இசை பாலைப்பண். இந்தப் பண் பாலையாழ் என்னும் பெயராலும் வழங்கப்படும்.

இவர் வேறு. நன்னாகனார் வேறு.

  • நன்மையை உணர்த்தும் நல் என்னும் அடைமொழி சேர்த்து வழங்கப்பட்ட பெயர் நன்னாகனார்.
  • நம் கிழமைப்பெயர் சேர்த்து உரிமையோடு வழங்கப்பட்ட பெயர் நந்நாகனார்.
இப்பாடலில் இசை காட்டுப் அடிகளில் சில
உரையின் உயர்ந்தன்று, கவின்.
போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று; (95 முதல் 98)
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
ஓசனை கமழும் வாச மேனியர்,
மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் (21 முதல் 27)

அடிக்குறிப்பு[தொகு]

  1. பரிபாடல் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்நாகனார்&oldid=2715307" இலிருந்து மீள்விக்கப்பட்டது