உள்ளடக்கத்துக்குச் செல்

நந்த் லால் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்த் லால் மீனா
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சனவரி 1946 (1946-01-25) (அகவை 80)
இராசத்தான், இந்தியா
இறப்பு2025 செப்டம்பர் 26
அகமதாபாத்
தேசியம் இந்தியா
துணைவர்சுமித்ரா தேவி
பிள்ளைகள்கேமந்த் மீனா (மகன்) மற்றும் ஐந்து மகள்கள்
பணிஅரசியல்வாதி

நந்த் லால் மீனா (25 சனவரி 1946-26 செப்டம்பர் 2025) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் வசுந்தரா ராஜே அமைச்சகத்தின் கீழ் மாநில பழங்குடி பகுதி மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.[1] பிரதாப்கர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இராசத்தான் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 முதல் 1991 வரை சாலும்பார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நந்த் லால், ஜனவரி 25, 1946 அன்று பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்பமாதா கா கேடா கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் உள்ளனர். இவரின் மனைவி சுமித்ரா தேவி சித்தோர்கர் மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார், அதே நேரத்தில் அவரது மகன் கேமந்த் மீனா இராசத்தான் அரசாங்கத்தில் வருவாய் அமைச்சராக உள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.இவர் தனது 79வது வயதில் அகமதாபாத் உள்ள ஒரு மருத்துவமனையில் 2025 செப்டம்பர் 26 அன்று இறந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நந்தலால் மீனா, ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் முன்னாள் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவராவார்.நந்தலாலின் அரசியல் வாழ்க்கை 1977 ஆம் ஆண்டு முதன்முதலில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது. 1989 ஆம் ஆண்டு சாலம்பர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஒன்பதாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1991 வரை பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sitting and previous MLAs from Pratapgarh Assembly Constituency". Elections.in.
  2. "Veteran Tribal Leader And Former Rajasthan Minister Nandlal Meena Dies At 79". 27 September 2025. https://www.etvbharat.com/en/!state/veteran-tribal-leader-and-former-rajasthan-minister-nandlal-meena-dies-at-79-enn25092703149.
  3. 1 2 "Veteran Tribal Leader And Former Rajasthan Minister Nandlal Meena Dies At 79". etvbharat.com. Retrieved 2025-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்த்_லால்_மீனா&oldid=4493304" இலிருந்து மீள்விக்கப்பட்டது