உள்ளடக்கத்துக்குச் செல்

நந்திபாகு வெங்கடசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்திபாகு வெங்கடசாமி (Nandipaku Venkataswamy) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] பாரதிய சனதா கட்சியுன் உறுப்பினராக இவர் ஆந்திரப் பிரதேச அரசியலில் ஈடுபட்டார்.[2] திருப்பதி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 13ஆவது மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். ஆந்திரப் பிரதேசத்தின் பாரதிய சனதா கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் பணியாற்றினார். திருப்பதி மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பாரதிய சனதா கட்சியின் ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே என்ற சிற்ப்புக்கும் உரியவர் ஆவார்.[3][4] 1999 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த இந்திய பொதுத் தேர்தலில், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சிறிய வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நந்திபாகு வெங்கடசாமி 1931 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று சித்தூரில் பிறந்தார், மே 15, 1963 ஆம் ஆண்டில் டி. சாவித்திரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thirteenth Lok Sabha State wise Details Andhra Pradesh". Lok Sabha. Retrieved 2022-10-17.
  2. "Thirteenth Lok Sabha Members Bio Profile Venkataswamy, Dr. Nandipaku". Lok Sabha. Retrieved 2022-10-17.
  3. "How the BJP is trying to make inroads into Andhra with the Tirupati bye-poll". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-31. Retrieved 2022-10-17.
  4. Dara, Gopi (20 November 2020). "Jagan Mohan Reddy meets party leaders on Tirupati bypoll" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/jagan-meets-party-leaders-on-tirupati-bypoll/articleshow/79309516.cms. 
  5. "Tirupati Lok Sabha Election Result 2019". Firstpost (in ஆங்கிலம்). 2019-05-23. Retrieved 2022-10-17.
  6. "బిజెపి మాజీ ఎంపి వెంకట స్వామి కన్నుమూత". On India (in தெலுங்கு). 2012-02-06. Retrieved 2024-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திபாகு_வெங்கடசாமி&oldid=4345711" இலிருந்து மீள்விக்கப்பட்டது