நந்தினி ரமணி
நந்தினி ரமணி | |
|---|---|
| பிறப்பு | 18 நவம்பர் 1950 தமிழ்நாடு |
| தேசியம் | |
| பணி | பரதநாட்டியக் கலைஞர் |
| பெற்றோர் | வெங்கடராமன் இராகவன் |
| விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது |
நந்தினி ரமணி (Nandini Ramani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் பரதநாட்டியக் கலைஞரும், நடன விமர்சகரும், சமசுகிருத நாடக நடிகையும் , நாடக இயக்குனரும், கல்வியாளரும் ஆவார். இவர் சமசுகிருத அறிஞரும் இசைக்கலைஞருமான வெங்கடராமன் இராகவனின் மகள் ஆவார். தனது ஒட்டுமொத்த பங்களிப்புக்காக சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சங்கீத நாடக அகாதமிவின் நிர்வாகக் குழு உறுப்பினர், இந்தியக் கலாச்சார உறவுக் குழு உறுப்பினர் மற்றும் சென்னை, மியூசிக் அகாதமியின் செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார்.
வாழ்க்கை
[தொகு]இரமணி நவம்பர் 18,1950 இல் சென்னையில் பிறந்தவர்.[1] இவரின் தந்தை வி. ராகவன் ஒரு சமசுகிருத அறிஞரும் இசைக்கலைஞரும் ஆவார்.[2] தனது ஐந்து வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.[3] ஒன்பது வயதில் தனது தந்தையின் சமசுகிருத நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.[3]
மொழி மற்றும் எழுத்தில் தனது தந்தையை குருவாகக் கொண்டுள்ளார்.[4] நடனக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி மற்றும் நாட்டுவனார் கே. கணேசன் ஆகியோர் இவரது நடனக் குருக்களாக இருந்தனர். அதே நேரத்தில் பி. கிருஷ்ணமூர்த்தி, டி. முக்தா ஆகியோரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.[2][4]
தொழில் வாழ்க்கை
[தொகு]நந்தினி இரமணி பரதநாட்டிய நடனக் கலைஞர், சமசுகிருத நாடக நடிகை மற்றும் இயக்குனர், கலை விமர்சகர், எழுத்தாளர், வெளியீட்டாளர், கட்டுரையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களித்து வருகிறார்.[2][5]
பரதநாட்டியத்தில், தனது குரு பாலசரஸ்வதியின் பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்.[3]/ 1970 இல் தனது முதல் மேடை நிக்ழச்சியினை வழங்கினார்.[1]1973-78 காலகட்டத்தில், மெட்ராஸ் மியூசிக் அகாதமியின் கீழ் பாலசரஸ்வதி பள்ளியில் பரதநாட்டியம் கற்பித்தார்.[1] நடனத்தைத் தவிர இரமணி கருநாடக இசைப் பாடகியும் ஆவார். மேலும் நடனமாடும் போது பாடக்கூடிய சில நடனக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.[6]
விருதுகள்
[தொகு]நந்தினி தனது ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாதமி விருது, பிரம்ம கான சபா வங்கிய 'நாட்டிய பத்ம' விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[4] ஜூலை 2023 இல், கார்த்திக் ராஜகோபால் நினைவு விருது வங்கப்பட்டது. நாட்டிய கலா சிகாமணி என்ற கௌரவமும் இவருக்கு அளிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Nandini Ramani Inheritor Of A Rare Legacy - Read this story on Magzter.com". www.magzter.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
- ↑ 2.0 2.1 2.2 Sampath, Janani (2015-05-27). "For the Love of the Language of Sanskrit". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
- ↑ 3.0 3.1 3.2 India, The Hans (2019-12-22). "Reflection of Nandini Ramani: The second edition of Antharangam". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
- ↑ 4.0 4.1 4.2 Ramani, V. V. (2018-02-08). "Nandini Ramani as the torchbearer of Bala bani" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2020-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220121320/https://www.thehindu.com/entertainment/dance/the-hindu-friday-review/article30413290.ece.
- ↑ "Carrying a legacy". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
- ↑ Sampath, Janani (2014-04-03). "'Art is a Continuous Journey, It Sails With You'". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.