நந்திதா ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திதா ஷா
Refer to caption
நாரி சக்தி விருது பெறும் நந்திதா
பிறப்புபெப்ரவரி 15, 1959 (1959-02-15) (அகவை 65)
மும்பை
தேசியம் இந்தியா
பணிஓமியோபதி
செயற்பாட்டுக்
காலம்
1981–
அறியப்படுவதுஉடல் நலம் மற்றும் விலங்குகளுடனும் இயற்கையுடனும் மீண்டும் இணைவதற்கான சரணாலயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"21 நாட்களில் நீரிழிவு நோயை மாற்றியமைத்தல்" என்ற புத்தகத்தை எழுதியது

நந்திதா ஷா (Nandita Shah) (பிறப்பு 1959) ஒரு இந்திய ஓமியோபதி மருத்துவரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1981ஆம் ஆண்டில் மருத்துவராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005ஆம் ஆண்டில் "உடல் நலம் மற்றும் விலங்குகளுடனும் இயற்கையுடனும் மீண்டும் இணைவதற்கான சரணாலயம்" என்ற அரசு சார்பற்ற அமைப்பை நிறுவினார். இவருக்கு 2016இல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நந்திதா ஷா 1959 பிப்ரவரி 15 அன்று மும்பையில் பிறந்தார். [1] மும்பையிலுள்ள சி. எம். பி ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஓமியோபதியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக, 1981 முதல் பயிற்சி பெற்று வருகிறார். [2] இவர் 1985 முதல் நனிசைவ உணவு முறையை கடைபிடிப்பவராக இருக்கிறார். நியூயார்க்கில் வாட்கின்ஸ் கிளெனில் உள்ள ஒரு விலங்குப் பண்ணை சரணாலயத்தில் பணிபுரிந்த பின்னர் ஒரு பயிற்சியாளராக 1999இல் புதுச்சேரியின் ஆரோவில்லுக்கு வந்தார்.

தொழில்[தொகு]

இவர், 2005ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்காக "உடல் நலம் மற்றும் விலங்குகளுடனும் இயற்கையுடனும் மீண்டும் இணைவதற்கான சரணாலயம்" என்ற அரசு சாரா அமைப்பை நிறுவினார். [2] சைவ உணவு உண்பதும் மூல உணவுகளை சாப்பிடுவதும் மனச்சோர்வு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று இவர் நம்புகிறார்.[3] 2020இல் இந்தியாவில் ஏற்பட்ட கொரானா வைரசுத் தொற்றுநோய்களின் போது, இவர் இணையத்தில் இலவசமாக சமையல் பட்டறைகளை வழங்கினார்[4]

விருது[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தனது குடியரசுத் தலைவர் இல்லத்தில் வழங்கிய 2016இல் நாரி சக்தி விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்களில் இவரும் ஒருவர். [5] 21 நாட்களில் நீரிழிவு நோயை மாற்றியமைத்தல் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். [4] பாலில் உள்ள புரதங்களை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இவர் நம்புகிறார். [6] 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் ஆரோவில்லில் வசித்து வந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nandita Shah". www.wholehealthnow.com. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
  2. 2.0 2.1 "Dr. Nandita Shah". SHARAN. Archived from the original on 24 November 2020. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
  3. Dadhwal, Sheetal (18 February 2020). "'Everything that is advertised is not healthy'" (in en). Tribune India இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116213256/https://www.tribuneindia.com/news/health/everything-that-is-advertised-is-not-healthy-43411. 
  4. 4.0 4.1 4.2 Anantharam, Chitra Deepa (31 March 2020). "SHARAN offers free online classes for building immunity using plant-based food" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 18 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200418032003/https://www.thehindu.com/life-and-style/food/sharan-offers-free-online-classes-for-building-immunity-using-plant-based-food/article31217183.ece. 
  5. Special correspondent (9 March 2017). "Four from State receive Nari Shakti awards" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116213325/https://www.thehindu.com/news/cities/chennai/four-from-state-receive-nari-shakti-awards/article17430682.ece. 
  6. Dundoo, Sangeetha Devi (16 November 2014). "Against the norm" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116213256/https://www.thehindu.com/features/metroplus/nandita-shah-plantbased-diet-to-reverse-diabetes/article6603019.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_ஷா&oldid=3400313" இலிருந்து மீள்விக்கப்பட்டது