நந்திதா தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்திதா தாஸ்
NanditaDas2008.jpg
பிறப்பு நவம்பர் 7, 1969 (1969-11-07) (அகவை 52)
புதுடில்லி, இந்தியா
தொழில் நடிகை, திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 1989, 1996 - இன்றுவரை
துணைவர் செளமியா சென் (2002 – 2005) (விவாகரத்து)
சுபோத் மஸ்காரா (2010-இன்றுவரை)
குறிப்பிடத்தக்க படங்கள் Fire (1996)
1947Earth (1998)

நந்திதா தாஸ் (பிறப்பு 7 நவம்பர் 1969) ஒரு விருதுபெற்ற இந்திய திரைப்பட நடிகையும் சுதந்திரமான திரைப்பட உருவாக்குநரும் ஆவார். ஒரு நடிகையாக ஃபயர் (1996), எர்த் (1998), பவந்தர் (2000) மற்றும் ஆமார் புவன் (2002) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுதல்களைப் பெற்று பிரபலமானவராக இருக்கிறார். ஒரு இயக்குநராக, அவர் தான் முதன்முதலாக இயக்கிய ஃபிராக் (2008) திரைப்படத்திற்காக பிரபலமடைந்தார். இது பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் செவாலியர் விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நந்திதா தாஸ், பிரபலமான இந்திய ஓவியரான மேற்கு வங்கத்திலிருந்து வந்தஜதின் தாஸ் என்பவருக்கும், குஜராத்தி இந்து-ஜெயின் மதத்தைச் சேர்ந்த எழுத்தாளரான வர்ஷாவுக்கும் புதுடெல்லியில் பிறந்தார்.[2]

அவர் புதுடெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் படித்தார். அவர் தன்னுடைய இளநிலை பட்டத்தை மிராண்டா ஹவுஸில் (டெல்லி பல்கலைக்கழகம்) புவியியல் பிரிவில் பெற்றார், முதுநிலைப் பட்டத்தை டெல்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கிலிருந்து பெற்றார்.[3] அவர் ஒரு சிறந்த மாணவர் என்பதோடு எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வந்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

நடிப்பு[தொகு]

நந்திதா தாஸ் தனது நடிப்பு வாழ்க்கையை ஜனத்யா மன்ச் என்ற நாடகக் குழுவோடு தொடங்கினார். அவர் ரிஷி வேலி பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

அவர் தீபா மேத்தாவின் திரைப்படங்களான ஃபயர் , ஆமிர் கானுடன் நடித்த எர்த் , பவந்தார் (ஜக்மோகன் முந்த்ரா இயக்கியது) மற்றும் அமார் புவன் (மிருணாள் சென் இயக்கியது) ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பி்ற்காக புகழ்பெற்றார்.

கரடி டேல்ஸ் ஆல் தயாரிக்கப்பட்ட "அண்டர் தி பன்யான்" என்ற குழந்தைகளுக்கான ஒலிப்புத்தகங்கள் வரிசையில் அவர் கதைசொல்லியாகவும்/வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். "தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத்" என்ற சர்க்கா ஒலிப்புத்தகங்களால் உருவாக்கப்பட்ட மஹாத்மா காந்தியின் ஒலிப்புத்தகத்திலும் அவர் வர்ணனையாளராக இருந்திருக்கிறார். தி ஒன்டர் பெட்ஸ் என்ற குழந்தைகளுக்கான தொடரில் அவர் வங்காளப் புலியாக தன்னுடைய குரலை வழங்கியிருக்கிறார்.

நந்திதா இன்றுவரை பத்து வெவ்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்: ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடா.

இயக்கம்[தொகு]

2008ஆம் ஆண்டில், அவர் தான் இயக்குநராக அறிமுகமான ஃபிராக்கின் படப்பிடிப்பை நிறைவுசெய்தார்.[4] ஃபிராக் ஆயிரக்கணக்கான உண்மைக் கதைகளின் அடிப்படையில் அமைந்த புனைவுப் படைப்பு என்பதுடன் 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்திற்குப் பின்னர் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேர காலகட்டத்தில் நடக்கின்ற, சமூகத்தின் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்த கதாபாத்திரங்களோடு வன்முறையின் நீடித்த விளைவுகளோடு நெருங்கிச் செல்கின்ற பல்வேறு கதைகளை உள்ளிணைத்து பின்னியதாக ஒரு பொதுத்தோற்றத்தைத் தரும் திரைப்படம் இது. இந்தத் திரைப்படம் சாமான்ய மக்களின் உணர்ச்சிப் பயணத்தைத் தேடிச்செல்வதாக இருக்கிறது - இவர்களில் சிலர் அதற்கு பலியானவர்கள், சிலர் வன்முறையாளர்கள் மற்றும் சிலரோ அதை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள். இந்தத் திரைப்படத்தில் நஸ்ருதீன் ஷா, ரகுபிர் யாதவ், பரேஷ் ராவல், தீப்தி நாவல், சஞ்சய் சூரி, திஸ்கா சோப்ரா, ஷஹானா கோஸ்வாமி மற்றும் நவாஸ் ஆகிய சிறந்த நடிகர்கள் தோன்றினர்.

இந்தத் திரைப்படம் 2008 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் திரைப்படங்கள் ஆசியத் திருவிழாவில் முதல் நிலை கௌரவத்தைப் பெற்றது, அதில் பின்வருவனவற்றிற்கான விருதுகளை வென்றது, "சிறந்த திரைப்படம்", "திரைக்கதை", மற்றும் "வெளிநாட்டு தொடர்பு கூட்டமைப்பு. சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச் விருது".[5][6] இந்தத் திரைப்படம் பின்வருபவை உள்ளிட்ட பிற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றது. கிரீஸில் நடைபெற்ற சர்வதேச தெஸாலோநிகி திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு விருது, கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது.[7] இது மார்ச் 20 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.[8] இந்தத் திரைப்படம் காரா திரைப்பட விழாவிலும் விருது பெற்றது.

"டொராண்டோ, லண்டன், புசான், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பாகங்களிலும் பார்வையாளர்களால் இந்தத் திரைப்படம் பாராட்டப்படுவது குறித்து ஃபிராக் திரைப்படத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேல் மனித உணர்ச்சிகள் உலகளாவியது என்பதையும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெற்ற இதுபோன்ற பின்னூட்டத்தால் நான் அதை இன்னும் அதிகமாக புரிந்துகொண்டேன். பார்வையாளர்களால் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிற கதாபாத்திரத்தோடு ஒன்று கலக்க முடிந்திருக்கிறது. இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ள, இதனோடு தங்களை அதிகம் அடையாளம் காண்கின்ற இந்தியாவிலும் அப்படித்தான். இன்னும் அமைதியாகவே இருக்கும் விஷயங்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு குரலை அளித்திருப்பதாக சொல்லப்படுவதோடு இது குறைந்தது ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்தத் திரைப்படத்தோடு நுழைந்த ஒவ்வொரு போட்டி விழாவிலும் விருதுகளை வெல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் பார்வையாளர்களின் எதிர்வினைகளே முக்கியமானதாக இருக்கிறது" என்று நந்திதா தாஸ் ரேடியோ சர்கத்திடம் கூறினார்.[9]

சொந்த வாழ்க்கை[தொகு]

2002 ஆம் ஆண்டில் தன்னுடைய நீண்டகாலக் காதலரான சௌம்யா சென்னை மணந்தார்.[10] சமூக உணர்வுள்ள விளம்பரப் படங்களை எடுக்கும் நோக்கமுள்ள விளம்பர நிறுவனமான லீப்ஃபிராக்கை இந்தத் தம்பதியினர் தொடங்கினர்.[11] அவர்கள் 2009 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.[12] மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்த இந்தத் திருமணம் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவகாரத்தில் முடிந்தது. மும்பையின் புறப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான சுப்தோஷ் மஸ்காராவுடனான சில மாதங்கள் நீடித்த காதலுக்குப் பின்னர் அவரை ஜனவரி 2, 2010 இல் மும்பையில் திருமணம் செய்துகொண்டார் [13][14].

சமூகப்பணி[தொகு]

தன்னுடைய படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், இந்தியாவில் சக்திவாய்ந்த தேசிய இயக்கத்தின் தேவை குறித்தும் தாஸ் உலகம் முழுவதிலும் பேசி வருகிறார். ஃபயர் திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் அவர் எம்ஐடியில் பேசினார்.

அவர் எய்ட்ஸ் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்தும் பேசிவருகிறார்.[15] அவர் 2009 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் திரைப்பட சமூகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

2001 சாண்டா மோனிகா திரைப்பட விழா
 • வென்றது - சிறந்த நடிகை - பவந்தர்
2002 கெய்ரோ திரைப்பட விழா
 • வென்றது - சிறந்த நடிகை - அமார் புவன்
2002 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள்
2005 கேன்ஸ் திரைப்பட விழா
 • மே 2005 - தாஸ் கேன்ஸ் 2005 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராக செயல்பட்டார்
2006 நந்தி விருதுகள்
 • வென்றது - சிறந்த நடிகை - கம்லி
2008 முதல் திரைப்படங்களின் ஆசிய விழா
 • வென்றது - சிறந்த திரைப்படம் - ஃபிராக்
 • வென்றது - சிறந்த திரைக்கதை - ஃபிராக்
 • வென்றது - வெளிநாட்டு தொடர்பு கூட்டமைப்பு சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச் விருது - ஃபிராக்
2009 கேரள சர்வதேச திரைப்பட விழா
 • வென்றது - சிறப்பு ஜூரி விருது - ஃபிராக்
2009 சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழா
 • வென்றது - சிறப்புப் பரிசு (எவரிடே லைஃப்: டிரான்சன்டன்ஸ் அல்லது ரிகன்ஸிலேஷன் விருது) - ஃபிராக்
 • பரிந்துரைக்கப்பட்டது - கோல்டன் அலெக்ஸாண்டர் - ஃபிராக்

திரைப்பட விவரங்கள்[தொகு]

நடிகர்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
1989 பரிநதி ஒரியா
1996 ஃபயர் சீதா ஆங்கிலம்
1998 எர்த் ஷாந்தா, அயா இந்தி
ஹஸார் சவுரோஸி கி மா நந்தினி மித்ரா இந்தி
ஜன்மதினம் சரசு மலையாளம்
பீஸ்வபிரகாஷ் அஞ்சலி ஒரியா
1999 தேவீரி தேவீரி (அக்கா) கன்னடம்
ராக்ஃபோர்ட் லில்லி வேகாஸ் ஆங்கிலம்
புனர்திவசம் - மலையாளம்
2000 ஹரி-பரி அஃஸனா இந்தி
சான்ஞ் உருது
பவந்தார் சன்வாரி ராஜஸ்தானி வென்றது , சாந்தா மோனிகா திரைப்பட விழாவில் சிறந்த நடிகை.
2001 அக்ஸ் சுப்ரியா வர்மா இந்தி
டாட்டர்ஸ் ஆஃப் தி சென்ச்சுரி சாரு இந்தி
2002 அமார் புவன் சகினா பெங்காலி வென்றது , கெய்ரோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகை.
வென்றது , சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருது
கண்ணகி கண்ணகி மலையாளம்
பிதாஹ் பாரோ இந்தி
அழகி தனலட்சுமி தமிழ்
கன்னத்தில் முத்தமிட்டால் ஷியாமா தமிழ்
லால் சலாம் ரூபி (என்ற சந்திரக்கா) இந்தி
2003 ஏக் அலக் மௌஸம் அபர்ணா வர்மா இந்தி
பஸ் யுன் ஹை வேதா இந்தி
சுப்பாரி மம்தா சிக்ரி உருது
சுபோ மஹுரத் மல்லிகா சென் பெங்காலி
ககார்: லைஃப் ஆன் தி எட்ஜ் அதிதி இந்தி
ஏக் தின் 24 காந்தே சமீரா தத்தா இந்தி
2004 விஷ்வ துளசி சீதா தமிழ்
2005 ஃப்ளீட்டிங் பியூட்டி இந்தியப் பெண்மனி ஆங்கிலம்
2006 மாட்டி மாய் சாந்தி மராத்தி சித்ரா பலேகர் இயக்கி அதுல் குல்கர்னியுடன் நடித்த மராத்தி மொழி திரைப்படம்
போதோகேப் மேகா பெங்காலி
கம்லி கம்லி தெலுங்கு வென்றது , சிறந்த நடிகைக்கான நந்தி விருது (தெலுங்கு)
2007 பிஃபோர் த ரெய்ன்ஸ் சஜானி ஆங்கிலம்
புரவோக்டு ராதா தலால் ஆங்கிலம்
நாலு பெண்ணுகள் காமாக்ஷி மலையாளம்
பானி: எ ட்ராப் ஆஃப் லைஃப் மீரா பென் இந்தி
2008 ராம்சந்த் பாகிஸ்தானி சம்பா உருது
2009 பிஃபோர் த ரெயின்ஸ் சஜானி ஆங்கிலம், மலையாளம்
2010 மிட்நைட்ஸ் சில்ட்ரன் [16] பத்மா அறிவிக்கப்பட்டது

இயக்குனர்[தொகு]

ஆண்டு தலைப்பு மொழி மற்றவை
2008 ஃபிராக் இந்தி
உருது &
குஜராத்தி
வென்றது , ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை.
வென்றது , ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச்சிட் விருது.
வென்றது , கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது.
வென்றது , சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு.
பரிந்துரைக்கப்பட்டது , சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் கோல்டன் அலெக்ஸாண்டர்.

பார்வைக் குறிப்புகள்[தொகு]

 1. 'என்னுடைய படைப்பு குறைந்த அளவிற்கே இந்தியாவில் பார்க்கப்படுகிறது'—இந்தியா-பஸ் எண்டர்டெயின்மெண்ட் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 23 ஏப்ரல் 2008.
 2. "The Painter's Daughter". www.outlookindia.com. 2009-12-30 அன்று பார்க்கப்பட்டது.
 3. Mendis, Isidore Domnick (23 June 2003). "Independent stardom". Hindu Business Line. 2009-06-20 அன்று பார்க்கப்பட்டது.
 4. Saltz, Rachel (4 June 2009). "The Variety of Life, Real and Imagined, in Movie-Mad India". New York Times. http://www.nytimes.com/2009/06/05/movies/05indi.html?ref=arts. பார்த்த நாள்: 2009-06-20. 
 5. Patrick Frater (10 December 2008). "'Firaaq' scoops Asian fest honors: Indian film picks up multiple awards". Variety. 2008-12-11 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
 6. Firaaq wins best film award at Asian Festival of 1st Films, Indiantelevision, 11 December 2008, 2008-12-11 அன்று பார்க்கப்பட்டது Text "cite web" ignored (உதவி)
 7. "PPC's FIRAAQ wins five International Awards". Bollywood Trade News Network. 22 January 2009. 2015-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. http://www.firaaqthefilm.com
 9. Nandita Das talks about her directorial debut Firaaq, Radio Sargam, 26 January 2009 Text "cite web" ignored (உதவி)
 10. "Nandita, Saumya remain friends". OneIndia. 2 August 2006. 2012-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. "Her own person". The Hindu. 19 December 2004. Archived from the original on 30 செப்டம்பர் 2008. https://web.archive.org/web/20080930210558/http://www.hindu.com/mag/2004/12/19/stories/2004121900440500.htm. பார்த்த நாள்: 20 June 2009. 
 12. Anand, Utkarsh (24 May 2009). "Actor Nandita Das files for divorce". Yahoo! India News. 2009-06-20 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Nandita Das is dating again". Movies.indiatimes.com. 2009-11-21. 2009-12-30 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. "Nandita Das marries, moves to Mumbai by SUBHASH K JHA". The Times of India. 6 January 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Nandita-Das-marries-moves-to-Mumbai/articleshow/5413317.cms. 
 15. Gautam, Savitha (27 Sepetember 2004). "Ms. Sense". The Hindu. 2004-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி)
 16. Vlessing, Etan (2008-11-07). "Deepa Mehta to adapt 'Midnight's Children'". Hollywoodreporter.com. 2008-12-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_தாஸ்&oldid=3370077" இருந்து மீள்விக்கப்பட்டது