நந்திதா கே. எஸ்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

நந்திதா கே. எஸ்.
Nanditha K. S.
பிறப்புமே 21, 1969(1969-05-21) [1]
வயநாடு மாவட்டம்
இறப்பு17 சனவரி 1999(1999-01-17) (அகவை 29)[1]
தேசியம்இந்திய மக்கள்
கல்விமுதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்கோழிக்கோடு பல்கலைக்கழகம்
பணிகவிஞர், விரிவுரையாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நந்திதாயுடே கவிதாகள்

கே. எஸ். நந்திதா (Nanditha K. S.) என்பவர் இந்தியாவின் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதும் கேரளாவைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவரது மரணத்திற்குப் பிறகு இவரது நாட்குறிப்பிலிருந்த இவரது கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டன.

வாழ்க்கை வரலாறு[தொகு]

நந்திதா மே 21, 1969 அன்று வயநாடு மாவட்டம் மடக்கிமலையில் சிறீதரன் மேனன் மற்றும் பிரபாவதி மேனனுக்கு மகளாகப் பிறந்தார்.[2] சலப்புரத்தில் உள்ள அரசு கணபதி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, ஜாமோரின் குருவாயூரப்பன் கல்லூரி, பாரூக் கல்லூரி, கோழிகோடு பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மற்றும் கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வியை முடித்தார். இவர் வயநாடு முட்டில் முஸ்லிம் அனாதை இல்ல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார்.[2] முனைவர் பட்ட ஆய்வினை "தனிப்பட்ட சுதந்திரம் - ஒரு தடுமாற்றம்: கெயில் காட்வின் நாவல்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்மையின் இலட்சியங்களுக்கு அணுகுமுறை" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.[2]

கவிதைகள்[தொகு]

1999 சனவரி 17 அன்று நந்திதா உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் இறந்த பிறகு, இவர் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத இவரது கவிதைகள் இவரது நாட்குறிப்பிலிருந்து இவருடைய பெற்றோர் கண்டுபிடித்தனர்.[3] மலையாள இலக்கிய விமர்சகர் எம். எம். பஷீரின் முயற்சியின் கீழ், 1985 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட இவரது கவிதைகளின் தொகுப்பு நந்திதாயுடே கவிதைகள் என்ற புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.[4] புத்தகத்தின் முதல் பதிப்பு 2002-ல் வெளியிடப்பட்டது மற்றும் எட்டாவது பதிப்பு 2018-ல் வெளியிடப்பட்டது.

நந்திதாவின் கவிதைகளில் மரணமும் காதலும் பொதுவான கருப்பொருளாக இருந்தன.[5] இவரது பெரும்பாலான கவிதைகள் மலையாளத்திலிருந்தாலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.[4] 2017-ல் வெளியான நந்திதா திரைப்படம் இவரது வாழ்வின் அடிப்படையிலானது.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_கே._எஸ்.&oldid=3688964" இருந்து மீள்விக்கப்பட்டது