நந்திகிராமம், அயோத்தி
நந்திகிராமம்
பரதகுண்டம் | |
|---|---|
கிராமம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அயோத்தி மாவட்டம் |
| வருவாய் வட்டம் | சோகாவால் |
| பெயர்ச்சூட்டு | பரதன்[1] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 224202 |
| வாகனப் பதிவு | UP-42 |
நந்திகிராம் அல்லது பரதகுண்டம் (Nandigram Or Bharatkund), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோகாவால் வருவாய் வட்டத்தில் உள்ள கிராமம். ஆகும்.[1][2]நந்திகிராம் அயோத்திக்கு தெற்கே 13.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நந்திகிராம் 764 குடியிருப்புகளும், 4,454 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 2,258 மற்றும் பெண்கள் 2,196 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 567 (12.73%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 63.34% ஆக உள்ளது.மக்கள் தொகையில் பட்டியல் சமூத்தினர் 31.63% உள்ளனர்.[3]
இராமாயணத்தில்
[தொகு]இராமன் 14 ஆண்டு வனவாசம் சென்ற போது, பரதன் நந்திகிராமத்தில் தங்கி அயோத்தியை ஆட்சி செய்தான்.[4]
தொடருந்து நிலையம்
[தொகு]நந்திகிராமத்தில் பரத்குண்ட் தொடருந்து நிலையம் உள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Nandigram (Bharat Kund) | Ayodhya | UP Tourism". uttarpradesh.gov.in. Retrieved 2020-03-24.
- ↑ "Nandigram (Bharat Kund) | Ayodhya | UP Tourism". ayodhya.gov.in. Retrieved 2020-03-24.
- ↑ Nandigram Village Population - Sohawal, Ayothiya District, Uttar Pradesh
- ↑ "Vālmīki Rāmāyana". Sloka & Translation | Valmiki Ramayanam.
- ↑ "Bharatkund (BTKD) Railway Station: Station Code, Schedule & Train Enquiry - RailYatri". www.railyatri.in. Retrieved 2021-02-25.
