நந்தனா (நடிகை)
நந்தனா | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2002–2006 |
| வாழ்க்கைத் துணை | மனோஜ் பாரதிராஜா (தி. 2006; இற. 2025) |
| பிள்ளைகள் | ஆர்த்திகா மதிவதனி |
| உறவினர்கள் | பாரதிராஜா (மாமனார்) |
நந்தனா (Nandana) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2000களில் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும், துணை வேடங்களிலும் நடித்தார். இவர் 2002-இல் வெளியான சிநேகிதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நந்தனா கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருவண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2006 நவம்பர் 19 அன்று தமிழ் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜாவை மணந்தார். சாதுர்யன் என்ற திரைப்படத்தில் மனோஜுடன் இணைந்து நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் மனோஜ் பாரதிராஜா 2025 மார்ச் 25 அன்று மாரடைப்பால் இறந்தார்.[1]
திரைப்படத்துறை
[தொகு]நந்தனா 2002 இல் வெளிவந்த சிநேகிதன் என்ற மலையாளத் திரைப்படத்தில், மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். 2003-இல் தமிழில் வெளியான சக்சஸ் என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.[2]
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படங்கள் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2002 | சிநேகிதன் | மலையாளம் | |
| 2003 | சுவப்ணம் கொண்டு துலாபாரம் | மலையாளம் | |
| 2003 | சக்சஸ் | தமிழ் | |
| 2004 | சேதுராம ஐயர் சிபிஐ | மலையாளம் | |
| 2004 | சதிக்காத சந்து | மலையாளம் | |
| 2005 | கல்யாணகக்குறிமானம் | மலையாளம் | |
| 2005 | சாதுரியன் | தமிழ் | |
| 2005 | ஏபிசிடி | தமிழ் | |
| 2006 | கலிங்கா | தமிழ் |
விளம்பரங்களில்
[தொகு]- சிறீதேவி டெகஸ்டைல்ஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actor-Director Manoj Bharathiraja Dies Due To Cardiac Arrest At 48". Times Now (in ஆங்கிலம்). 2025-03-25. Retrieved 2025-03-25.
- ↑ "பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது". Filmibeat. 2004-02-05. Retrieved 2024-10-07.