நந்தனார் சரித்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நந்தனார் சரித்திரம் என்பது ஒரு தமிழிசைக் காவியமாகும். இது திருநாளைப் போவார் என்ற பெயரால் 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் நந்தனார் வாழ்க்கையில் இறைவனோடு நிகழ்ந்தாக சொல்லப்படும் சில அதிசய சம்பவங்களை இசைப் பாடல்கள் கொண்டு விளக்கும் தொகுப்பாக கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றினார்.

நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:

1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை

2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ

3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே

4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ

5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி

6. எப்போ தொலையும் இந்த துன்பம்

7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா

9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்

10. கட்டை கடைதேறவேணுமே

11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே

13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்

14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு

15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ

17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்

18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்

19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு

20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்

21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்

22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி

23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு

24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்

25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்

26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்

27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது

28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா

29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி

30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்

31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்

32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி

33. மற்றதெல்லாம் பொறுப்பேன்

34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்

35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனார்_சரித்திரம்&oldid=570918" இருந்து மீள்விக்கப்பட்டது