நந்ததேவி சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நந்ததேவி சரணாலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.இந்த சரணாலயம் இமையமலையில் பனிப் பிரதேசத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு மிக அருகில் பந்த்நகர் விமான நிலையம் அமைந்துள்ளது.இந்த சரணாலயத்திற்கு மிக அருகில் கத்கோடம் ரயில் நிலையம் அமைந்துள்ளது.இங்கிருந்து கத்கோடம் ரயில் நிலையம் 304 கி.மீ தூரத்தில் உள்ளது.

இமையமலையில் உள்ள மலைவாச தலங்களான நைனிடால்,பீம்தால்,முக்தேஸ்வர்,ரணிகேத், ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலை கத்கோடத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுகிறது.தொடர்ந்து இந்த சாலை பத்ரிநாத் சென்று இந்திய திபெத் எல்லையை கடந்து திபெத்துக்குள் செல்கிறது.இந்த சாலையில் நந்ததேவி சரணாலயம் அமைந்துள்ளது.

நந்ததேவி சரணாலயத்தின் பரப்பளவு 630 சதுர கி.மீ.இந்த சரணாலயத்தில் பிரவுன் கரடி,ஹிமாலய கறுப்புக் கரடி,பனிச் சிறுத்தை,கஸ்தூரிமான் ,கோரல்,பணிப்புழு போன்ற பனிப்பிரதேச உயிர்கள் இங்கு உள்ளன.


பார்வை நூல் 1.இந்திய சரணாலயங்கள் சுற்றுலா, அ.ராம் கோபால்=பாவை பதிப்பகம் =சென்னை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்ததேவி_சரணாலயம்&oldid=2723616" இருந்து மீள்விக்கப்பட்டது