நந்தகுமார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தகுமார்
இயக்கம்நாராயண ராவ்
டி. சர்போதார்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
பிரகதி பிக்சர்ஸ்
கதைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
மாஸ்டர் சேதுராமன்
ராஜா சாந்தோ
சி. வி. வி. பந்துலு
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
டி. எஸ். ராஜலட்சுமி
டி. ஆர். இராமச்சந்திரன்
வெளியீடுசூலை 6, 1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நந்தகுமார் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாராயண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். இராமச்சந்திரன், மாஸ்டர் சேதுராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பின்னணி பாடகி[தொகு]

தமிழ்த் திரை வரலாற்றில் முதன் முதலாக, ஒரு நடிகை நடிக்க, பின்னணியில் வேறொருவர் குரல் கொடுத்து பாடல் பாடும் முறை அறிமுகமானது. தீன தயாபரனே என்ற பாடலை படத்தில் கிருஷ்ணரின் தாயாக நடித்த நடிகைக்காக அப்போது பம்பாயில் பிரபலமாக இருந்த கருநாடக இசைப் பாடகி லலிதா வெங்கடராமன் பாடினார். நடிகை பாடலுக்கேற்ப வாயசைத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ராண்டார் கை (12 அக்டோபர் 2007). "Nandakumar 1938". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/nandakumar-1938/article3023893.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

யூடியூபில் தீன தயாபரனே - தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தகுமார்_(திரைப்படம்)&oldid=3713931" இலிருந்து மீள்விக்கப்பட்டது