நத்தை ஓடு செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெடிக்காகோ சடைவா

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : மெடிக்காகோ சடைவா Medicago sativa

குடும்பம் : லெகுமினோசே (Leguminosae)

இதரப் பெயர்[தொகு]

  • சுருள் ஓடு (Coiled seed pod)
  • லுசிர்னி (Lucerne)

செடியின் அமைப்பு[தொகு]

மெடிக்காகோ சடைவா வயல்வெளி

இது ஒரு சிறு செடியாகும். 2 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கடினமான தண்டு உடையது. இதனுடைய பூ இளம் ஊதா சிவப்பு நிறத்திலோ, சில சமயம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

இளம் ஊதா பூ

சிறப்பு பண்புகள்[தொகு]

காய் முதிர்ச்சியடைந்தவுடன் இதன் ஓடு சுருண்டு இருக்கும். பார்ப்பதற்கு நத்தையின் ஓடு போல் இருக்கும். இதன் விதை உணவாக உண்கிறாராகள். இவற்றில் அதிகப்படியான புரோட்டின் உள்ளது. இச்செடியை ஆடு மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறார்கள். மனிதர்கள் தீவனத்திற்கு முதன் முதலில் பயிரிட்டது இதுவே ஆகும். இது ஆசியா நாட்டு செடியாகும். தற்போது உலகம் முழுவதும் தீவனத்திற்காகவும், விதைக்காகவும் பயிரிடுகிறார்கள். இக்குடும்பத்தை சார்ந்த சில செடிகளில் வரும் ஓடு விசித்திரமாக இருக்கும். புழு போன்றும், கம்பளிப்பூச்சி போலும் இருக்கும். சூப் வைத்து கொடுக்கும்போது இந்த கம்பளிப்பூச்சி ஓடு, புழு ஓடு, நத்தை ஓடு ஆகியவற்றை விளையாட்டிற்கு போட்டுக்கொடுப்பார்கள். ஆனால் இவற்றை சாப்பிடுவதில்லை.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தை_ஓடு_செடி&oldid=2900050" இருந்து மீள்விக்கப்பட்டது