நத்தானியேல் எவெரெட் கிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தானியேல் எவெரெட் கிரீன் (Nathaniel Everett Green) [1] (21 ஆகத்து 1823 – 10 நவம்பர் 1899) ஓர் ஆங்கிலேய ஓவியரும் கலையாசிரியரும் வானியலாளரும் ஆவார். இவர் நில இயற்கையையும் உருவக் காட்சிகளையும் தொழில்முறையில் வரைந்ததோடு, கோள்களின் ஓவியங்களை வரைந்து பெரும்புகழ் எய்தினார்.[2]

200pநத்தானியேல் கிரீனின் செவ்வாய் நிலப்படம்

இவர் ஆணுடை வணிகரான பெஞ்சமின் கோல்டெர் கிரீனுக்கும்(1793–1865) எவெரெட் எனப்பட்டஏலிசபெத் பெட்சிக்கும்(1795–1837) பிரிச்ட்டோலில் பிறந்தார்; இவர் 1859 இல் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு தொலைநோக்கியைச் செய்த பிறகு வானியலில் ஆர்வம் பூண்டார். இவர் 1877 இல் செவ்வாய்க் கோளின் ஓவியங்களை மென் எழுதுகோலால் வரைந்தார். இது பரவலாக அனைவராலும் அறியப்படலானது. இவற்றை வரைந்து குறுகிய காலத்துக்குள், முதன்முதலாக செவ்வாய்க் கால்வாய்கள் ஒளியியல் பொய்த்தோற்றங்களே எனக் கருத்து தெரிவித்தார்.

இவர் 1880 இல் பால்மோரல் கோட்டைக்கு அழைகாப்பட்டார். அங்கே இவர் அரசி விக்டோரியா அடங்கலான அரசக் குடும்பத்தினருக்கு ஓவியப் பயிற்சி அளித்தார்.

இவர் பிரித்தானிய வானியல் கழகத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். இவர் 1897 இலும் 1898 இலும் அக்கழகத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் 1847 இல் எலிசபெத் கோல்டை மணந்தார். இவர்களது மகளான அன்னா கோல்டு கிரீன், நில இயற்கை ஓவியரான இலாரன்சு ஜார்ஜ் பாம்போர்டை மணந்தார்.

இவர் 1847 இல் எலிசபெத் கோல்டை மணந்தார். இவர்களது மகளான அன்னா கோல்டு கிரீன், நில இயற்கை ஓவியரான இலாரன்சு ஜார்ஜ் பாம்போர்டை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]