நத்தலி இமானுவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நத்தலி இமானுவேல்
Nathalie Emmanuel by Gage Skidmore.jpg
2016 இல் நத்தலி இமானுவேல்
பிறப்புநத்தலி ஜோன்னே இம்மானுவல்
2 மார்ச்சு 1989 (1989-03-02) (அகவை 33)
இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006– தற்போது

நத்தலி ஜோன்னே இம்மானுவல் [1] (பிறப்பு: 1989 மார்ச் 2) என்பவர் ஆங்கில நடிகை ஆவார். இம்மானுவல் 1990 களின் பிற்பகுதியில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். தி லயன் கிங் இசையை வெஸ்ட் எண்ட் தயாரித்திருந்தது. அதில் நடித்திருந்தார்.[2]

2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சோப் ஓபரா என்ற பிரிட்டீஸ் தொடரில் சாசா வேலட்டேன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். டிவன்டி8கே என்ற திரைப்பத்தில் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்தார். ஹச்பிஓ தொலைக்காட்சியில் கேம் ஆப் திரோன்ஸ் தொடரில் மிஸ்யேன்டி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மேலும் திரைப்படங்களான மேஸ் ரன்னர்: தி ஸ்கோர்ச் ட்ரையல்ஸ் (2015), ஃபியூரியஸ் 7 (2015), தி ஃபேட் ஆஃப் த ஃபியூரியஸ் (2017) மற்றும் பிரமை ரன்னர்: தி டெத் க்யூர் (2018) போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்..

திரைப்பட வரலாறு[தொகு]

திரைப்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புக்கள்
2012 டிவன்டி8கே கார்லா
2015 சீற்றம் 7 மேகன் ராம்சே
2015 பிரமை ரன்னர்: தி ஸ்கோர்ச் ட்ரையால்ஸ் ஹாரியட்
2017 தி பட் ஆஃப் தி ஃபியூரியஸ் மேகன் ராம்சே
2018 பிரமை ரன்னர்: தி டெத் க்யூர் ஹாரியட்
2018 தி டைட்டன் டபல்யூ.டி டேலி ரதர்ஃபோர்ட்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு (கள்) தலைப்பு பங்கு குறிப்புக்கள்
2006-2010 ஹாலொயாக்ஸ் சாஷா வேலட்டேன் 191 அத்தியாயங்கள்
2008 ஹாலொயாக்ஸ் பின்னர் சாஷா வேலட்டேன் தொடர் 1 (4 அத்தியாயங்கள்)
2009 ஹாலொயாக்ஸ் :தி மார்னிங் ஆப்டர் தி நேட் பிபோர் சாஷா வேலட்டேன்
2011 கேசுவாலட்டி செரில் ஹாலோஸ் பாகம்: "ஒன்லி ஹியூமன்"
2011 மிஸ்பிட்ஸ் சார்லி பாகம் 3.1
2012 வெப்செக்ஸ்:வாட்ஸ் தி ஹார்ம் வழங்குபவர்
2013-தற்போது சிம்மாசனங்களின் விளையாட்டு மிஸ்ஸிலாண்டி பருவங்கள் 3 & 4: தொடர்ச்சியான (15 அத்தியாயங்கள்)
சீசன் 5-தற்போது: முக்கிய பங்கு (19 அத்தியாயங்கள்)
2019 போர் வெட்டிங் அன்ட் எ பர்னல் மாயா குறுந்தொடர்
2019 தி டார்க் கிரிஸ்டல்: ரெஜிஸ்டன்ஸ் ஏஜ் டீட் குறுந்தொடர், குரல் பாத்திரம்

ஆதாரங்கள்[தொகு]

  1. பிறப்பு, இறப்பு & இறப்பு பட்டியல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், 1984-2004.(Births, Marriages & Deaths Index of England & Wales, 1984–2004.)
  2. "Game of Thrones's Nathalie Emmanuel Gears Up for Furious 7". Vanity Fair (Condé Nast). March 2015. http://www.vanityfair.com/hollywood/2015/02/nathalie-emmanuel-game-of-thrones-furious-7. பார்த்த நாள்: 4 April 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தலி_இமானுவேல்&oldid=2761311" இருந்து மீள்விக்கப்பட்டது