நத்தம் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நத்தம் பாளையம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது. கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் ( செட்டியார்களும் ) வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது. கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும் இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. ”நத்தம்” பகுதியை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார். இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை நியமித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்_பாளையம்&oldid=3288027" இருந்து மீள்விக்கப்பட்டது