உள்ளடக்கத்துக்குச் செல்

நதீசா உயங்கோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நதீசா உயங்கோடா
2021 ஆம் ஆண்டில் நதீசா உயங்கோடா
2021 ஆம் ஆண்டில் நதீசா உயங்கோடா
பிறப்புமார்ச்சு 15, 1993 (1993-03-15) (அகவை 33)
கொழும்பு, இலங்கை
தொழில்
  • Writer
  • இணைய வானொலி தொகுப்பாளர்
  • நூலாசிரியர்
மொழி
  • இத்தாலியன்
  • ஆங்கிலம்
குடியுரிமை
  • இத்தாலி
  • இலங்கை
செயற்பட்ட ஆண்டுகள்2021–முதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • அறையில் இருக்கும் ஒரே கருப்பின நபர், முக்கியத்துவம் வாய்ந்த உடல்கள்)
  • இணையதள வானொலித் தொகுப்பு: இனத்தைப் பற்றி
இணையதளம்
www.nadeeshauyangoda.it

நதீசா உயங்கோடா (Nadeesha Uyangoda) என்பவர் இலங்கை-இத்தாலிய எழுத்தாளர் ஆவார். நூலாசிரியர் மற்றும் இணையதள வானொலி தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இவருடைய படைப்புகள் குடியேற்றம் மற்றும் அடையாளம் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டவையாகும். இவர், அறையில் இருக்கும் ஒரே கருப்பின நபர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உடல்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். மேலும், இனத்தைப் பற்றி என்ற இணையதள வானொலி வடிவத்தின் தொகுப்பாளராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான அனிமா பரிசு உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1993 ஆம் ஆண்டு கொழும்புவில் இவர் பிறந்தார்.[1][2] இலங்கையின் உள்நாட்டு போரின் காரணமாக, தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி, ஆறு வயதில் இத்தாலிக்குச் சென்றார்.[3] தனது குடும்பமும் தானும் அனுபவித்த இத்தாலியின் குடியேற்றக் கொள்கைகள் காரணமாக, குடியேற்ற மக்களின் உரிமைகள் குறித்து வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகிறார். இரண்டாம் தலைமுறை இத்தாலிய குடியேற்றவாசிகள் அரசியலின் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களுடைய அனுபவங்களை பொதுச் சமூக விவாதங்களில் முன்வைக்கும் இரண்டாம் தலைமுறை குடியேற்றவாசிகளின் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இவர் பார்க்கப்படுகிறார்.[4] இவரது எழுத்துகள் பெரும்பாலும் குடியேற்றம் மற்றும் அடையாளம் ஆகிய தலைப்புகளை மையமாகக் கொண்டவையாகும்.[5][6]

தொழில்

[தொகு]

நூல்கள்

[தொகு]

உயங்கோடா, அறையில் இருக்கும் ஒரே கறுப்பின நபர் எனும் நூலின் ஆசிரியர் ஆவார். இந்நூல் 2021-ஆம் ஆண்டு ரோம் நகரில் வெளியிடப்பட்டது. இத்தாலியில் தான் எதிர்கொண்ட இனவெறி சார்ந்த அனுபவங்களை விவரிக்கும் இந்த நினைவுக்குறிப்பு நூல், கலாச்சாரங்களுக்கிடையிலான பொருளை உணர்த்த இத்தாலிய, ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளைப் பயன்படுத்துவதால், இதன் பாணியை அன்னரிட்டா தரோனா என்பவர் "பன்மொழிப் பயன்பாட்டின் ஓர் அந்தரங்கமான செயல்முறை" என்று வர்ணித்துள்ளார்.[7] மேலும், தரோனா இந்நூலை சாடி சுமித்து சிமந்தா நகோசி அடிச்சி மற்றும் தாயே செலசி ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளார். விமர்சனக் கோட்பாட்டாளரும் எழுத்தாளருமான இயெனிவீவ் மகாபிங், சமகால இனவெறியைப் பிரதிபலிக்கும் இத்தாலிய எழுத்தாளர்களின் புதிய தலைமுறையில், உயங்கோடா ஒரு முக்கிய குரலாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.[8]

அறையில் இருக்கும் ஒரே கறுப்பின நபர் எனும் இந்நூல் எசுப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, இரண்டு பதிப்பகங்களால் இணைந்து வெளியிடப்பட்டது.

இணைய வானொலித் தொகுப்பு

[தொகு]

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இனத்தைப் பற்றி என்ற இணைய வானொலித் தொகுப்பை உருவாக்கினார். இது யுவென்டசு எஃப்.சி என்ற கால்பந்து கழகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டது. இனவெறியை மையமாகக் கொண்டுள்ள இது, குறிப்பாக ஆங்கிலோ-அமெரிக்க சூழல்களில் பயன்படுத்தப்படும் சொற்களஞ்சியத்தை மொழிபெயர்த்து இனத்தைப் பற்றி விவாதிக்கிறது.[9][10] இத்தாலியில் இனரீதியான உரையாடலைத் தடுக்கும் ஒரு அம்சமாக இந்த மொழி இடைவெளி இருப்பதாக உயங்கோடா உணர்ந்தார். இவர் விவரித்த ஒரு உதாரணம்: "நான் ஒரு பழுப்பு நிற தெற்காசியன், ஆனால் இத்தாலிய மொழியில் பழுப்பு நிற மக்களுக்கு எந்த வார்த்தையும் இல்லை. இதுவரை இந்த மொழி இடைவெளிகள், பெரும்பாலும் இனவெறி எவ்வளவு பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தவில்லை, அவை முக்கிய ஊடகங்களால் நிரப்பப்படவில்லை. உயங்கோடா நதீசா பெர்னாண்டோ மற்றும் மரியா கேட்டினா மன்குசோவுடன் இணைந்து இணைய வானொலித் தொகுப்பை தொகுத்து வழங்குகிறார். இத்தாலியில் கோவிட்-19 தொற்றுநோயால் சமூக தொடர்புகளுக்கான வாய்ப்புகள் குறைந்து, இனத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது.[11]

விருதுகள்

[தொகு]
  • இலக்கியத்துக்கான அனிமா பரிசு – 2021[12]
  • அன்னா மரியா ஆர்டெசு ரப்பல்லோ சிறப்பு பரிசு – 2021[13]
  • சிலா பரிசு 'பொருளாதாரம் மற்றும் சமூகம்' – 2022[14]
  • இயுடிட்டா எசோர்டியண்டே விருது) – 2022[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Rilevazione ospiti partecipanti alle trasmissioni Rai – 1 luglio - 31 dicembre 2024" (PDF) (in இத்தாலியன்). RAI. 31 December 2024. p. 107. Retrieved 14 September 2025.
  2. Romeo, Caterina; Fabbri, Giulia (16 August 2024). Intersectional Italy (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-040-11208-3.
  3. D’Ignoti, Stefania (18 February 2025). "Can Culture, Not Blood, Make You Italian?". Foreign Policy (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 15 February 2025.
  4. Centers and Peripheries in Romance Language Literatures in the Americas and Africa (in ஆங்கிலம்). BRILL. 15 January 2024. p. 409. ISBN 978-90-04-69113-1.
  5. "Nadeesha Uyangoda Festival Ferrara". Internazionale (in இத்தாலியன்). Archived from the original on 21 February 2025. Retrieved 15 February 2025.
  6. Profeta, Daniele (2021). "Grand Tours and The Construction Of Italian Identities". Log (53): 103–108. பன்னாட்டுத் தர தொடர் எண்:1547-4690. https://www.jstor.org/stable/27157127.
  7. Taronna, Annarita (3 September 2022). "Shaping translingual writing and translation as intersectional practices: Nadeesha Uyangoda's L'unica persona nera nella stanza and Sulla razza as case studies". Journal of Postcolonial Writing 58 (5): 684–697. doi:10.1080/17449855.2022.2158357. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-9855. https://www.tandfonline.com/doi/full/10.1080/17449855.2022.2158357.
  8. Makaping, Geneviève (13 January 2023). Reversing the Gaze: What If the Other Were You? (in ஆங்கிலம்). Rutgers University Press. ISBN 978-1-9788-3470-5.
  9. Media, Common (21 October 2021). "In Europe, Podcasters of Color Make Their Own Space for Conversations on Race". Nieman Reports (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 February 2025. Retrieved 15 February 2025.
  10. Hernández, Felipe (6 December 2022). Ardeth #09: RACE. Exploring the Modern-Colonial Legacy in Contemporary Architecture (in ஆங்கிலம்). Rosenberg & Sellier. p. 6. ISBN 979-12-5993-107-8.
  11. Sievers, Wiebke (11 December 2023). Cultural Change in Post-Migrant Societies: Re-Imagining Communities Through Arts and Cultural Activities (in ஆங்கிலம்). Springer Nature. pp. 107–108. ISBN 978-3-031-39900-8.
  12. "PREMIO ANIMA 2021". Anima per il Sociale (in அமெரிக்க ஆங்கிலம்). 10 October 2022. Retrieved 15 February 2025.
  13. "Portale Trasparenza Città di Rapallo – Premio Speciale Giuria Anna Maria Ortese −37° Edizione del Premio Letterario Nazionale per la Donna Scrittrice Rapallo 2021". trasparenza.comune.rapallo.ge.it (in இத்தாலியன்). Archived from the original on 21 February 2025. Retrieved 15 February 2025.
  14. Riera, Enrica (31 May 2022). "Conclusa la decima edizione, Lagioia, Castellina e Uyangoda premiati a Palazzo Arnone". Premio Sila '49 (in இத்தாலியன்). Archived from the original on 21 February 2025. Retrieved 15 February 2025.
  15. "PREMIO LETTERARIO". www.soroptimist.it. Archived from the original on 21 February 2025. Retrieved 15 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதீசா_உயங்கோடா&oldid=4595844" இலிருந்து மீள்விக்கப்பட்டது