நதாலி பதால்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நதாலி பதால்கா
Natalie Batalha
நதாலி பதால்கா
பிறப்புமே, 14, 1966
கலிபோர்னியா
துறைவானியல்
புறவெளிக் கோள்கள்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு (முனைவர்)
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி (அறிவியல் இளவல்)
அறியப்படுவதுகெப்ளர் திட்டம்
விருதுகள்

நதாலி எம். பதால்கா (Natalie M. Batalha) ஓர் அமெரிக்க வானியல், வானியற்பியல் பேராசிரியர் ஆவார், இவர் சாந்தா குரூசு கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார். முன்பு இவர் நாசா அமேசு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி வானியலாளராகவும் இணை ஆய்வாளராகவும் கெப்ளர் திட்ட அறிவியலாளராகவும் இருந்துள்ளார். கெப்ளர் திட்டந்தான் விண்மீன்களைச் சுற்றிவரும் புவிநிகர் கோள்களின் தேடலில் முதலில் முனைந்த திட்டமாகும்.[1][2][3]

இளமையும் வாழ்க்கையும்[தொகு]

இவர் சான்பிரான்சுக்கோ கடற்கரைப் பகுதியில் வளர்ந்தார், இவர் பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார்.[4][5]> இவர் முதலில் வணிகவியல் பட்டம் படிக்க சேர்ந்தாலும் கணிதத்தால் விளக்க முடிந்த மென்படலக் குறுக்கீடு (சவர்க்காரக் குமிழிகளிலும் எண்ணெய்க் கடைதலிலும் ஏன் வானவில் தோன்றுகிறது என்பன) போன்ற அன்றாட நிகழ்ச்சிகளின் பட்டறிவு இவரை இயற்பியலுக்கு மாறச் செய்துள்ளது. இவர் பட்டப் படிப்பின்போது சூரியன் போன்ற விண்மீன்களை நோக்கும் உடுக்கணங்களின் கதிர்நிரல் நோக்கராக வேலை செய்துள்ளார். இயற்பியலில் தன் இளவல் பட்டத்தைப் பெற்றதும், இவர் சாந்தாகுரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் ஆய்வில் ஈடுபட்டார். பிறகு தன் முதுமுனைவர் ஆய்வை பிரேசிலில் உள்ள இரியோ டி ஜெனீரோவில் முடித்தார்.[2]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவரை1997 இல் வில்லியம் பரூக்கி அறிவியல் குழுவொன்றில் இணைத்துக் கொண்டார். இவர் அப்போது கடப்புநிலை ஒளியளவியல் பணியைத் தொடங்கினார். இவர் வடிவமைப்பு, நிதி ஏற்பாட்டு நிலையில் இருந்தே ஓர் மூல்முதல் துணை ஆய்வாளர்களில் ஒருவராக கெப்ளர் புறவெளிக் கோள் தேட்டத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்திட்டத்தில் இவர் 1,50,000 விண்மீன்களைத் தேர்ந்தெடுத்து தொலைநோக்கியால் கண்காணித்துள்ளார். இவர் இப்போது அமேசு ஆராய்ச்சி மையக் குழுவுடன் இணைந்து கெப்ளர் திட்ட்த் தரவுகளில் இருந்து புவிநிகர் புறவெளிக் கோள்களை இனங்காண முயன்று வருகிறார். இவரது பகுப்பாய்வு 2011 இல் கெப்ளர்10b கோளைக் கண்டறிய வழிவகுத்தது. நம் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டறியப்பட்ட முதல் கோளாகும்.[6]

படித்த உரைகள்[தொகு]

இவர் 2016 இல் 'A Planet for Goldilocks' எனும் உரையைக் கூகுளில் நிகழ்த்தியுள்ளார். மேலும் இவர் 'From Lava Worlds to Living Worlds' எனும் உரையை பீறிட்டெழும் முயற்சிகளுக்காக 2019 இல் ஆற்றியுள்ளார்.[7][8]

தகைமைகள்[தொகு]

இவரும் பிற இரண்டு புறவெளிக் கோள் அறிவியலாளர்களும் டைம் இதழின்100 அரிய தாக்கம் செலுத்தியவர்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். [9] இதே ஆண்டில் இவருக்கு இயற்பியற் புலங்களுக்கான அமெரிக்க மதிநுட்பர் விருதை சுமித்சோனிய இதழ் அறிவித்தது.[10]

இவர் 2019 இல் அமெரிக்க க் கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] இவர் 2020 இல் அமெரிக்க வானியல் கழகத்தால் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mission Scientist: Natalie Batalha". NASA. 2012-03-12. Archived from the original on September 15, 2015.
  2. 2.0 2.1 "Natalie Batalha". Space Science and Astrobiology at Ames. NASA. Archived from the original on September 23, 2015.
  3. "Natalie Batalha". Kepler. NASA: Ames Research Center. Archived from the original on September 21, 2015.
  4. Wolchover, Natalie (2021-12-03). "The Webb Space Telescope Will Rewrite Cosmic History. If It Works". Quanta Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  5. Magazine, Smithsonian; Ferris, Timothy Archibald,Timothy. "Meet Natalie Batalha, the Explorer Who's Searching for Planets Across the Universe". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. Lemonick, Michael D (2012). Mirror Earth : the search for our planet's twin. New York: Walker. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8027-7900-7. இணையக் கணினி நூலக மையம்:879630400. https://archive.org/details/mirrorearthsearc0000lemo. 
  7. யூடியூபில் "A Planet for Goldilocks"
  8. யூடியூபில் "From Lava Worlds to Living Worlds"
  9. Stern, Alan. "Natalie Batalha, Guillem Anglada-Escudé and Michaël Gillon". The World’s 100 Most Influential People. Time. Archived from the original on 2 May 2017.
  10. "2017 American Ingenuity Award Winners". Smithsonian Magazine. Smithsonian. Archived from the original on 27 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "New 2019 Academy Members Announced". American Academy of Arts and Sciences. April 17, 2019.
  12. "AAS Fellows". AAS. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதாலி_பதால்கா&oldid=3559985" இலிருந்து மீள்விக்கப்பட்டது