உள்ளடக்கத்துக்குச் செல்

நண்பகல் நேரத்து மயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நண்பகல் நேரத்து மயக்கம்
திரையரங்கு வெளியீட்டு சுவரிதழ்
இயக்கம்லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
தயாரிப்புமம்மூட்டி
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
திரைக்கதைஎஸ். ஹரீஷ்
நடிப்புமம்மூட்டி
ரம்யா பாண்டியன்
அசோகன்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புதீபு எஸ். ஜோசப்
கலையகம்மம்மூட்டி கம்பெனி
ஆமென் மூவி மோன்ஸ்டரி
விநியோகம்துல்கர் சல்மான்
வெளியீடு12 திசம்பர் 2022 (ப.கே.தி.வி)
19 சனவரி 2023
ஓட்டம்104 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
தமிழ்

நண்பகல் நேரத்து மயக்கம் (Nanpakal Nerathu Mayakkam, அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் Like An Afternoon Dream [2] ) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளம் - தமிழ் இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். பெல்லிசேரியின் கதைக்கு எஸ். ஹரீஷ் திரைக்கதை அமைக்க லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். [3] இதனை மம்மூட்டி மற்றும் பெல்லிசேரி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மம்முட்டி, ரம்யா சுவி, ரம்யா பாண்டியன், அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை தூக்கமின்மை, ஆன்மீகம், கனவுருப்புனைவு ஆகிய இழைகளைக் கொண்டது. [4] [5]

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் 19 சனவரி 2023 அன்று திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு (குறிப்பாக மம்முட்டி) ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

கதை

[தொகு]

கேரளத்திலிருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணிக்கு சக மலையாளி சுற்றுலாப் பயணிகளுடன் ஜேம்ஸ் தன் குடும்பத்திடன் பயணம் மேற்கொள்கிறார். பயணம் முடித்து மூடுந்தில் கேரளத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் உறக்கத்தில் இருக்கும் போது ஜேம்ஸ் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மூடுந்தை நிறுத்துகிறார். பின்னர் ஜேம்ஸ் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைகிறார். பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் உறுப்பினராக சுந்தரம் என்ற பெயரில் செயல்படத் தொடங்குகிறார். மலையாளியான ஜேம்ஸ் சுந்தரம் என்ற ஒரு தமிழன் போல நடந்து கொள்கிறார். மேலும் அந்த பகுதியில் உள்ளவர் போல தமிழில் பேசுகிறார். இது அவருடன் பயணம் செய்தவர்களை மட்டுமல்லாமல், உள்ளூர் கிராம மக்களையும் குழப்புகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன சுந்தரத்தின் குணம், பாவனை, மொழி ஆகியவற்றை அவர் பிரதிபளிப்பதை இறுதியில் மக்கள் உணர்கின்றனர். சுந்தரத்துகு மட்டுமே தெரிந்திருந்த கிராம மக்கள் பற்றிய சில விசயங்கள் ஜேம்சுக்கு தெரிந்துள்ளது. ஊரில் கட்டப்படாமல் இருந்த கோயில் கட்டப்பட்டிருப்பது போன்ற திடீர் மாற்றங்களைப் பார்த்து ஜேம்ஸ்/சுந்தரம் குழப்பமடைகிறார். ஜேம்சின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை கேரளாத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் தூங்கி எழுந்த பிறகு, ஜேம்ஸ் தனது உண்மையான அடையாளத்தை மீண்டும் பெறுகிறார். மேலும் அவர்களுடன் வீடு திரும்ப விருப்பத்துடன் புறப்படுகிறார். இறுதியில், சுந்தரத்தின் கதாபாத்திரம் கனவா அல்லது நனவா? என்ற குழப்பம் உண்டாகிறது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

2021, நவம்பர், 7 அன்று, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தின் தலைப்பை சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முதன்முறையாக இணைந்துள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம். இந்தப் படத்தை மம்மூட்டி கம்பனி என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பதாகையில் மம்மூட்டியே தயாரித்துள்ளார். [4] [6]

2021 நவம்பர் 7 அன்று, தமிழ்நாட்டின் பழனிக்கு அருகிலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் முதன்மை படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு 2021 திசம்பர் 7 அன்று முடிவடைந்தது [7]

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் 2022 டிசம்பர் 12 [7] அன்று கேரள 27வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இருவரையும் பார்வையாளர்கள் பாராட்டினர். [6]

2023 சனவரி 19, அன்று, நண்பகல் நேரத்து மயக்கம் திரையரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்கு வெளி வந்தது. [8]

வீட்டு ஊடகம்

[தொகு]

படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை நெற்ஃபிளிக்சுக்கு விற்கப்பட்டது. இது 2023 பெப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்டது [9]

பாராட்டுக்கள்

[தொகு]
ஆண்டு விருது/விழா வகை பெறுபவர் குறிப்புகள்
2022 கேரள சர்வதேச திரைப்பட விழா சில்வர் கிரோ பீசண்ட் விருது (ராஜத சகோரம்) [10] [11] நண்பகல் நேரத்து மயக்கம் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

குறிப்புகள்

[தொகு]
  1. "Nanpakal Nerathu Mayakkam". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 29 January 2023.
  2. C-DIT. "Nanpakal Nerathu Mayakkam | International Competitions". www.iffk.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
  3. "Nanpakal Nerathu Mayakkam OTT release date and time!". STAGE SCREENing. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  4. 4.0 4.1 "Mammootty-Lijo film titled 'Nanpakal Nerathu Mayakkam'". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/nov/09/mammootty-lijo-film-titled-nanpakal-nerathu-mayakkam-2381101.html. 
  5. "Malayalam Star Mammootty Starts Shooting for Lijo Jose Pellissery's Film in Palani". https://www.news18.com/news/movies/malayalam-star-mammootty-starts-shooting-for-lijo-jose-pellisserys-film-in-palani-4439744.html. 
  6. 6.0 6.1 "Mammootty-Lijo Jose Pellissery's film gets a serene, hypnotic teaser". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  7. 7.0 7.1 "Mammootty completes shooting for Nanpakal Nerathu Mayakkam". newindianexpress.com. 7 December 2021.
  8. "Mammootty starrer 'Nanpakal Nerathu Mayakkam' gets a release date - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
  9. "Nanpakal Nerathu Mayakkam on OTT: Mammootty-starrer bowls over audience on Twitter after it drops on Netflix".
  10. "27th IFFK winners list: Utama, Ariyippu win big; Mammootty's Nanpakal Nerathu Mayakkam tops audience poll". The Indian Express (in ஆங்கிலம்). 2022-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
  11. "'Nanpakal Nerathu Mayakkam' screening row: Ranjith booed at IFFK closing ceremony". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பகல்_நேரத்து_மயக்கம்&oldid=3984872" இலிருந்து மீள்விக்கப்பட்டது