நண்டு தின்னி
Crab-plover | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | Dromadidae GR Gray, 1840 |
பேரினம்: | Dromas Paykull, 1805 |
இனம்: | D. ardeola |
இருசொற் பெயரீடு | |
Dromas ardeola Paykull, 1805 | |
![]() |
உடலமைப்பு[தொகு]
[2] ஆங்கிலப்பெயர் :Crab-Plover
அறிவியல் பெயர் :Dromas ardeola
41 செ.மீ. - பருத்த தலையும் உடலும் கழுத்தும் வாலும் வெள்ளை நிறம். கருப்பான உடலைக் கொண்ட இதன் அலகு தடித்ததாகக் கருத்துக் குறுகியதாக இருக்கும். நீண்ட கால்களையுடையது.
காணப்படும் பகுதிகள்[தொகு]
தமிழகத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இதனைக் கடற்கரைப் படுகைகள், உப்பங்கழிகள், பவழத் திட்டுகள் ஆகியவற்றைச் சார்ந்து திரியக் காணலாம். சிறுகூட்டமாகவும் 50 வரையான குழுவாகவும் காணப்படும்.
உணவு[தொகு]
காலை மாலை அந்திகளில் தாவித்தாவி விரைந்து ஓடிக் கடற்கரையில் வாழும் நண்டுகளை இரையாகத் தேடித் தின்னும். அச்சம் கொள்ளும் இயல்புடையது என்பதால் எளிதில் நெருங்கிக் காண முடியாது. இதன் பழக்க வழக்கங்கள் அடுத்த கண் கிலேடியின் பழக்க வழக்கங்களை ஒத்தது. பறக்கும்போது தாமரைக்கோழி பறப்பதை நினைவூட்டும் வகையில் பறக்கும். வலசை வரும் போது இங்கு குரல் கொடுப்பதில்லை.
இனப்பெருக்கம்[தொகு]
இனப்பெருக்கம்பெர்சியன் வளைகுடாவில் பவளப் பாறைகளைக் ஆழமாகக் குடைந்து அளவில் பெரியதாக ஒரே ஒரு முட்டையிடும் விசித்திரப் பழக்கம் உடையது. [3]
வெளி இணைப்புகள்[தொகு]
Crab Plover videos, photos & sounds on the Internet Bird Collection
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dromas ardeola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
- ↑ "Crab-plover நண்டு தின்னி". பார்த்த நாள் 28 செப்டம்பர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:55