நண்டுரோங்கா நவோசா மாகாணம்
நண்டுரோங்கா நவோசா மாகாணம் Province of Nadroga-Navosa Nadrogā-Navohā | |
---|---|
![]() நண்டுரோகா - விட்டிலெவு தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது | |
மாகாணம் | நண்டுரோங்கா - நவோசா |
தீவு | விட்டிலெவு |
கோட்டம் | மேற்குக் கோட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 921 sq mi (2,385 km2) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 58, 387 |
நேர வலயம் | 1200 GMT (ஒசநே+12) |
நண்டுரோங்கா நவோசா என்பது பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டிலெவு தீவில் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 2,385 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. விட்டிலெவு தீவில் மையப் பகுதியுன், தென்மேற்குப் பகுதியும் இந்த மாகாணத்துக்கு உட்பட்டவை. 2007-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 58,387 மக்கள் வசித்தனர். இங்குள்ள சிங்கடோகா என்னும் நகரில் 9622 மக்கள் வாழ்கின்றனர். [1] இந்த மாகாணத்தை மாகாண சபை ஆட்சி செய்யும்.
மாவட்டங்கள்[தொகு]
- துவு
- நசிங்கடோக்கா
- டுவா
- மலோமலோ
- வாய்
- மலோலோ
- நங்கலிமாரே
- நமடாக்கு
- நொய்கோரோ
- தோனுவா
- ராவிராவி
- நோகோனோகோ
- வாய்தோம்பா
- மவுவா
- இம்பேமனா
- நவடுசிலா
- கோரோய்னசாவு
- கொமாவே
- கொரோலெவு ஐ வாய்
- நசிகவா
- நண்டுராவு
- வடுலேலே
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-10 அன்று பார்க்கப்பட்டது.