நட்டாக்கி பிரியங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நட்டாக்கி பிரியங்கா
Nutakki Priyanka
நாடுஇந்தியா
பிறப்பு2002
தலைப்புபெண்கள் அனைத்துலக மாசுட்டர் (2018)

நட்டாக்கி பிரியங்கா (Nutakki Priyanka) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 01 ஆம் நாள் பிறந்தார். இந்தியப் பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டம் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது[1].

வாழ்க்கை வரலாறு[தொகு]

இளையோர் சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிகளின் வெவ்வேறு வயது பிரிவு போட்டிகளில் நட்டாக்கி பிரியங்கா கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஒன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2011[2], பதினோரு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2013[3], 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2015[4][5] போன்றவை இவருடைய வெற்றிகள் ஆகும்.

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுப் போட்டியிலும்[6], பெண்களுக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுப் போட்டியிலும் போட்டியிட்டு நட்டாக்கி பிரியங்கா வெற்றிகள் பெற்றார்[7]. 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ரீகா தொழில்நுட்ப பல்கலைக்கழக சதுரங்கச் சாம்பியன் பட்ட்த்தின் ஏ பிரிவு போட்டியில் மிகச் சிறந்த பெண் சதுரங்க வீராங்கனை என்ற பட்டம் இவருக்குக் கிடைத்தது[8].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்டாக்கி_பிரியங்கா&oldid=2802752" இருந்து மீள்விக்கப்பட்டது