நடு-அத்திலாந்திக்கு முகடு

நடு-அத்திலாந்திக்கு முகடு (Mid-Atlantic Ridge) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடலின் தரைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நடுக்கடல் முகடு (ஒரு விரிநிலை அல்லது ஆக்கபூர்வமான தட்டு வரப்பு) ஆகும், இது உலகின் மிக நீளமான மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். வடக்கு அத்திலாந்திக்கில், இந்த முகடு வட அமெரிக்கத் தட்டை யூரேசியத் தட்டிலிருந்தும் ஆப்பிரிக்க தட்டிலிருந்தும், அசோரசு முச்சந்திப்பின் வடக்கு மற்றும் தெற்கே பிரிக்கிறது. தெற்கு அத்திலாந்திக்கில், இது ஆப்பிரிக்க, தென் அமெரிக்கத் தட்டுகளைப் பிரிக்கிறது. இந்த முகடு கிரீன்லாந்தின் வடகிழக்கில் தெற்கே கக்கெல் முகடு (நடு-ஆர்க்ட்டிக்கு முகடு) உடனான சந்திப்பிலிருந்து தெற்கு அத்திலாந்திக்கில் உள்ள போவெட் முச்சந்திப்பு வரை நீண்டுள்ளது. நடு-அத்திலாந்திக்கு முகடு பெரும்பாலும் நீருக்கடியில் உள்ள ஒரு கூறாக இருந்தாலும், அதன் பகுதிகள், எடுத்துக்காட்டாக ஐசுலாந்தில், கடல் மட்டத்திற்கு மேல் நீட்டிக்க போதுமான உயரத்தைக் கொண்டுள்ளன. இந்த முகடு ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2.5 சென்டிமீட்டர் (1 அங்குலம்) வரை பரவுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Understanding plate motions". United States Geological Survey. 5 May 1999. Retrieved 13 March 2011.
உசாத்துணை
[தொகு]- Evans, Rachel. "Plumbing Depths to Reach New Heights: Marie Tharp Explains Marine Geological Maps." The Library of Congress Information Bulletin. November 2002.
