நடுவமெரிக்கப் பிரமிடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நடுவமெரிக்கப் பிரமிடுகள் பட்டியல் என்னும் தலைப்பிலான இப்பக்கம் நடுவமெரிக்காவில் உள்ள பிரமிடுகள் அல்லது சடங்குசார் அமைப்புகளின் பட்டியல் ஆகும். பிரமிடுகள் என்று அழைக்கப்பட்டாலும், இவ்வமைப்புக்களில் பல உண்மையில் பிரமிடுகள் அல்ல. மெக்சிக்கோவிலும், நடுவமெரிக்காவின் பிற பகுதிகளிலும், இவ்வகை அமைப்புக்கள் பல்வேறு பாணிகளில் அமைந்தனவாக நூற்றுக்கணக்கில் உள்ளன. இவை, ஒல்மெக், மாயன், தொல்தெக், அசுட்டெக் போன்ற பல்வேறு கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகளைச் சேர்ந்த மக்களால் அமைக்கப்பட்டவை. இவற்றுட் பல இது போன்ற பல கட்டிடங்களை அமைத்த நகர அரசுகளால் கட்டப்பட்டவை. ஒவ்வொரு நகர அரசும் தனித்துவமான பாணிகளில் அமைந்த கட்டிடங்களைக் கட்டியுள்ளன. இவற்றுட் பெரும்பலானவை, கற்களும் சாந்தும் கொண்டு அமைக்கபட்டவை. எனினும் இவற்றுட் காலத்தால் முந்தியவையான சில கட்டிடங்கள் மண்ணால் ஆனவை.

களம் பிரமிடு பண்பாடு அடி அளவு (மீ) உயரம் (மீ) சரிவு காலம் பயன் குறிப்புகள் படிமங்கள்
அல்த்துன் ஹா பெலீசு மாயன் 16 கிபி 200 - 900
கராக்கோல் பெலீசு கானா மாயன் 43 A triadic பிரமிடு, பெலீசில் உள்ள, மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான அமைப்பு.
கராக்கோல் பெலீசு மரவிட்டக் கோயில் மாயன்
லமானை பெலீசு உயர் கோயில் மாயன் 33 முன்-செந்நெறிக் காலம்
லமானை பெலீசு கருஞ் சிறுத்தைக் கோயில் மாயன் 20 முன்-செந்நெறிக் காலம்
லுபாந்துன் பெலீசு மாயன் கிபி 730 - 890 லுபாந்துன் அமைப்புக்களில் பல பெரிய கற்குற்றிகளை சந்து பயன்படுத்தாமல் ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கட்டப்பட்டவை. இப்பகுதியில் அதிகம் கிடைக்கும் சுண்ணக் கற்களினால் கட்டாமல், கருஞ் சிலேட்டுக் கற்களினால் அமைக்கப்பட்டவை.
லுபாந்துன் பெலீசு மாயன் கிபி 730 - 890 லுபாந்துன் பெரிய பிரமிடுகளையும் பல சிறிய பிரமிடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
நிம் லி புனித் பெலீசு மாயன் ஆகக்கூடிய உயரம் 12.2 கிபி 400 - 800 நிம் லி புனித் பல்வேறு சிறிய படிப் பிரமிடுகளைக் கொண்டுள்ளது.
சுனந்துனிச் பெலீசு எல் காசுட்டில்லோ மாயன் 40 கிபி 600 - 900
சான் ஆன்ட்ரெசு, எல் சல்வடோர் சான் ஆன்ட்ரெசின் மணி மாயன் கிபி 600 - 900 இது ஐந்தாம் இலக்க அமைப்பின் சிறிய மாதிரி ஆகும். களத்தில் இருப்பது போன்ற பல சிறிய பிரமிடுகள் இருக்கின்றன.
தசுமல் எல் சல்வடோர் மாயன் கிபி 250 - 900
அகுவாதெக்கா குவாதமாலா மாயன் 6 கிபி 760 - 830 நகரம் கைவிடப்பட்டபோது இது கட்டிமுடிக்காமல் விடப்பட்டுள்ளது.
டாசு பிலாசு குவாதமாலா எல்.டி-49 மாயன் 20 கிபி 629 க்குப் பின்னர் இப் பிரமிடின் முதன்மைப் படிக்கட்டு குறைந்தது 18 படுகைத்தளக் குறியீடுகளைக் கொண்ட படிகளைக் கொண்டுள்ளது.
கமினல்சூயு குவாதமாலா மாயன் கிபி 250 கமினல்சூயுவில் ஏறத்தாழ 200 மேடைகளும் பிரமிடு மேடுகளும் உள்ளன. இவற்றுள் அரைப் பங்காவது கிமு 250 க்கு முந்தியவை. இவற்றுட் சிலவற்றின் உச்சியில் கோயில்கள் இருந்தன.
எல் மிராடோர் குவாதமாலா லா டான்டா மாயன் 72 கிமு 300 - கிபி 100 2,800,000 கனமீட்டர் கனவளவு கொண்ட லா டான்டா பிரமிடுக் கோயில் உலகின் மிகப் பெரிய பிரமிடுக்களில் ஒன்று.
எல் மிராடோர் குவாதமாலா எல் டைகர் மாயன் 55 கிமு 300 - கிபி 100
மிக்சுக்கோ வியேஜோ குவாதமாலா மாயன் கிபி 1100 - 1500
திக்கல் குவாதமாலா மாயன் 47
கோப்பான் ஒண்டூராசு மாயன் கோப்பனில் பல மேற்கவியும் படிப் பிரமிடுகள் உள்ளன.
பொனாம்பக் மெக்சிக்கோ சுவரோவியக் கோயில் மாயன் கிபி 580 - 800
கலக்முல் மெக்சிக்கோ பெரிய பிரமிடு மாயன் 55
சிச்சென் இட்சா மெக்சிக்கோ எல் காசுட்டில்லோ மாயன் 55.3 30
சோலுலா மெக்சிக்கோ சோலுலாவின் பெரிய பிரமிடு செல்குவா 450 சது. 66 கிமு 300 - கிபி 800 மிகப் பெரிய பிரமிடும், உலகில் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய அமைப்பும் இதுவே.
கோபா மெக்சிக்கோ நோகொச் முல் பிரமிடு மாயன் 42 கிபி 500 - 900
கோபா மெக்சிக்கோ லா இக்லேசியா மாயன் கிபி 500 - 900
கோபா மெக்சிக்கோ குறுக்குச் சாலைக் கோயில் மாயன் கிபி 500 - 900
எல் தாசின் மெக்சிக்கோ மாடக்குழிப் பிரமிடு செந்நெறி வேராக்குரூசு 18
லா வெந்தா மெக்சிக்கோ பெரிய பிரமிடு ஒல்மெக் 33 இது நடுவமெரிக்காவில் உள்ள மிகப் பழைய பிரமிடுக்களுள் ஒன்று. இது ஏறத்தாழ 100,000 கன மீட்டர் மண் நிரப்பி உருவாக்கப்பட்டதாகக் கணக்கிட்டுள்ளனர்.
பலெங்கு மெக்சிக்கோ சிலுவைக் கோயில் மாயன்
பலெங்கு மெக்சிக்கோ கல்வெட்டுக் கோயில் மாயன்
சாந்த சிசிலியா அகதித்லான் மெக்சிக்கோ அசுட்டெக் 1962ல் கட்டிடக்கலைஞரும் தொல்லியலாளருமான எடுவார்டோ பரெயோன் மொனேரோ இதை மீள்கட்டுமானம் செய்து பிரமிடின் அடிப்பகுதியை வலுவாக்கியதுடன், அதன் மேலிருந்த கோயிலையும் மீண்டும் கட்டினார்.
தெனயூக்கா மெக்சிக்கோ அசுட்டெக் 62 x 50 இதுவரை கண்டறியப்பட்ட அசுட்டெக் இரட்டைப் பிரமிடுகளில் காலத்தால் முந்தியது இது. இணைந்த பிரமிடுவடிவ அடிப்பகுதியின் மேல் இரண்டு கோயில்கள் உள்ளன.
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ மயோர் கோயில் அசுட்டெக் 100 x 80 கிபி 1390 - 1500 தெனொச்சித்தித்லானை எசுப்பானியர் அழித்துவிட்டனர். வரலாற்று நூல்களையும், தொல்லியல் அழிபாடுகளையும் அடிப்படையாக வைத்து இதையும் பிற பிரமிடுகளையும் மீளமைத்தனர்.
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ அசுட்டெக் கிபி 1325 - 1521 தெனொச்சித்தித்லானை எசுப்பானியர் அழித்துவிட்டனர். வரலாற்று நூல்களையும், தொல்லியல் அழிபாடுகளையும் அடிப்படையாக வைத்து இதையும் பிற பிரமிடுகளையும் மீளமைத்தனர். இக் களம் ஒரு காலத்தில் குறைந்தது ஆறு பிரமிடுக்களையாவது கொண்டிருந்தது.
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ சூரியப் பிரமிடு தியொத்திவாக்கன் 223.5 71.2 32.494 2 A.D. There are also dozens of platforms 4 stories high lining the Avenue of the Dead at Teotihuacan. These each step in each story and they have a stair way to the top in front of the platforms.
தியொத்திவாக்கன் மெக்சிக்கோ சந்திரப் பிரமிடு தியொத்திவாக்கன் 43 2 A.D.
எல் தெப்போசுட்டெக்கோ மெக்சிக்கோ அசுட்டெக் கிபி 1502
துலா, இடல்கோ மெக்சிக்கோ தொல்டெக்
உக்சுமல் மெக்சிக்கோ மாயக்காரன் பிரமிடு மாயன்
உக்சுமல் மெக்சிக்கோ லா கிரான் பிரமிடு மாயன்
சோச்சிக்கால்க்கோ மெக்சிக்கோ இறகுப் பாம்புக் கோயில் கிமு 200 - கிபி 900
சோச்சிக்கால்க்கோ மெக்சிக்கோ கிமு 200 - கிபி 900 இறகுப் பாம்புக்கோயில் தவிர இங்குள்ள வேறு பல கோயில்களுள் இதுவும் ஒன்று.
சோச்சிதெக்காட்டில் மெக்சிக்கோ பூப் பிரமிடு 100 x 140 முன்செந்நெறிக் காலம்
சோச்சிதெக்காட்டில் மெக்சிக்கோ சுருள் கட்டிடம் கிமு 700 இது ஒரு வட்டவடிவான படிப் பிரமிடு. இதன் உட்புறம் எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. இக் கட்டிடத்தில் மேலே செல்வதற்குப் படிக்கட்டுகள் எதும் காணப்படவில்லை. இதன் சுருள் வடைவ அமைப்பில் நடந்தே உச்சியை அடைந்ததாகத் தெரிகிறது.
யக்சிலான் மெக்சிக்கோ மாயன் கிபி 600 - 900 இது யக்சிலானின் மேற் தளத்தில் உள்ள ஒரு பிரமிடு.

வெளியிணைப்புக்கள்[தொகு]