நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி (Enthalpy of neutralization) என்பது ஒரு சமான அமிலமும் ஒரு சமான காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் உருவாகும் நடுநிலையாக்கல் வினையில் ஏற்படும் வெப்ப அடக்கம் அல்லது என்தால்பி மாற்றத்தைக் குறிக்கும். (ΔHn) என்ற குறியீட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. வினைபடு பொருள்களும் வினைவிளை பொருள்களும் செந்தர நிலையில் காணப்படுவதால் இவ்வினை என்தால்பி வினையில் இது ஒரு சிறப்பு வகையாகும். ஒரு மோல் நீர் மூலக்கூறு உருவாகும் போது வெளிப்படும் ஆற்றல் நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி என வரையறுக்கப்படுகிறது. திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 298 கெல்வின் வெப்பநிலையில் (25 பாகை செல்சியசு), 1 வளிமண்டல அழுத்தத்தில் இவ்வினை மேற்கொள்ளப்பட்டு ஒரு மோல் நீர் உருவாக்கப்படுமேயானால் அதுவே செந்தர நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி எனப்படும் (ΔHn⊖). வினையின் போது வெளிப்படும் வெப்பம் (Q)

இங்கே m என்பது கரைசலின் நிறை, cp என்பது தன்வெப்ப ஏற்புத்திறன் [1], மற்றும் ΔT என்பது வினையின் போது ஏற்படும் வெப்பநிலை மாற்றம் ஆகும். ΔT மாற்றத்தை வினையில் ஈடுபடும் பொருளின் அளவால் (மோல்) வகுக்கும் போது செந்தர என்தால்பி மாற்றம் (ΔH) கிடைக்கும்.

ஒரு வீரியம்மிக்க அமிலம் HA, வீரியம்மிக்க காரத்துடன் B (OH) வினைபுரியும் போது கீழ்கண்ட வினை நிகழ்கிறது.

அமிலமும் காரமும் முழுவதுமாக பகுக்கப்படுவதால், நேர் அயனி B + அல்லது எதிர் அயனி A− நடுநிலையாக்கல் வினையில் ஈடுபடுவதில்லை. 25 பாகை செல்சியசு வெப்ப நிலையில் வினையின் என்தால்பி மாற்றம் -57.62 கிலோ யூல் / மோல் ஆகும். வீரியம் குறைந்த அமிலங்கள் மற்றும் காரங்கள் பங்கேற்கும் வினைகளில் நடுநிலையாக்கல் வெப்பம் என்பது pH- அளவைப் பொருத்து அமைகிறது. கனிம அமிலம் அல்லது காரம் சேர்க்கப்படாத நிலையில் சேர்மத்தை முழுமையாக பிரிகையடையச் செய்ய சிறிது வெப்பம் தேவைப்படுகிறது. இவ்வகை நடுநிலையாக்கல் வினையின் போது வெளிப்படும் ஒட்டுமொத்த வெப்ப ஆற்றல் குறைவாக இருக்கும்.

எ.கா. <math chem>\ce{HCN + NaOH -> NaCN + H2O};\ \Delta H = -12 கிலோயூல் /மோல் at 25° (செல்சியசு)

இந்த வினையின் அயனியாதல் வெப்பம் (-12 + 57.3) = 45.3 கிலோயூல் /மோல் அளவுக்குச் சமமாக இருக்கும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Heat_capacity
  2. "Enthalpy of Neutralization" (PDF). Community College of Rhode Island. Archived from the original (PDF) on 13 டிசம்பர் 2016. Retrieved 24 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)