நடுநிலைப் பள்ளி (தமிழ்நாடு)
Appearance
தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும், கல்வியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.