நடுத் தீவு
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
அமைவிடம் | கென்யா |
பகுதி | துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா |
கட்டளை விதி | இயற்கைக் களம்: (viii)(x) |
உசாத்துணை | 801bis-002 |
பதிவு | 1997 (21-ஆம் அமர்வு) |
விரிவுகள் | 2001 |
பரப்பளவு | 500 ha (1,200 ஏக்கர்கள்) |
ஆள்கூறுகள் | 3°29′30″N 36°4′0″E / 3.49167°N 36.06667°E |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
நடுத் தீவு, முதலைத் தீவு என்றும் அழைக்கப்படுவது (Central Island, also known as Crocodile Island) கென்யாவில் துர்க்கானா ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவு ஆகும். இது நடுத் தீவு தேசிய பூங்காவின் அமைவிடமாக உள்ளது, இது கென்யா வனவிலங்கு பணியகத்தால் நிருவகிக்கப்படுகிறது. [1]
பருந்துப் பார்வை
[தொகு]நடுத் தீவு ஒரு டசன் பள்ளங்களாலும் கூம்புகளாலும் ஆனது. அவற்றில் மூன்று சிறிய ஏரிகளும் உள்ளன. இரண்டு பெரிய ஏரிகள் ஒரு கிலோமீட்டர் அகலமும் சுமார் 80 மீ ஆழமும் கொண்ட பள்ளங்களை ஓரளவு நிரப்பியதாக உள்ளன. அவற்றின் கரைகள் கடல் மட்டத்திற்கு அருகில் உள்ளன. தீவின் மிக உயரமான இடம் 550 மீட்டர் உயரமாகும் என்றாலும், ஏரியின் மேற்பரப்பில் இருந்து காணக்கிட்டால் சுமார் 190 மீ உயரமாகும். பல சிறிய தீவுகள் பகுதியளவு நீரில் மூழ்கியதாக தீவின் விளிம்புகளில் உள்ளன. மேலும் கூம்புகளும், எரிமலை குமிழ்களும் தீவின் அருகே ஏரியின் மேற்பரப்புக்கு அடியில் காணப்படுகின்றன.
தீவில் உள்ள எரிமலைவாயின் செயல்பாடு மத்திய பள்ளத்தின் NE-to-SE விளிம்பில் குவிந்துள்ளது. எரிமலை வாயிலிருந்து கந்தக உமிழ்வுகள் 1930 களில் காணப்பட்டன. 1974 ஆம் ஆண்டில் உருகிய கந்தகத்தின் தீவிர உமிழ்வு மற்றும் நீராவி மேகங்கள் நிலப்பகுதியிலிருந்து காணப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kenya Wildlife Service – Central Island National Park பரணிடப்பட்டது சூன் 5, 2011 at the வந்தவழி இயந்திரம்