நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடு[தொகு]

அறிமுகம்[தொகு]

 நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடு என்பதை பிறர் கவனத்தை ஈர்க்கும் மனவெழுச்சி கொண்ட ஆளுமைக்குறைபாடு என அமெரிக்கா உளவியலாளர் அமைப்பு கூறுகிறது, இது தொடக்க நடுவயது பருவத்தில் தோன்றுகின்ற பிறரை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும், பிறர் தன்னை ஏற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தும் தன்மை கொண்டது. நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடுடையோர் எப்பொழுதும் உற்சாகமாகவும்,வியத்தகு பண்புகளுடனும்,கலகலப்பாகவும் காணப்படுவர்.நடிப்புத் திறன் குறைபாடு ஆண்களை விட பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக பாதிப்பிற்கு உட்படுகின்றனர். பொதுவான மக்கள் தொகையில் 2 -3% பேர் பாதிப்பிற்குள்ளாகின்றனர் மற்றும் மனநல நிறுவனத்தில் 10 -15% உள், வெளி நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

பொருள்[தொகு]

    நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடு வியத்தகு தொகுப்பை கொண்ட ஆளுமைக் குறைபாடு. நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடுடைய மக்கள் அதிக கவன ஈர்ப்பு, பொருத்தமற்ற தோற்றமுடையவராகவும்,அவர்களுடைய மனவெழுச்சி மற்றும் குணங்களை மிகைப்படுத்துவபர்களாகவும் மற்றும் தூண்டுதலினால் தள்ளப்படுபவர்களாகவும் இருப்பர். பாலுணர்வு பற்றி அறியும் ஆர்வத்தை தூண்டுகிற நடத்தை கொண்டிருத்தல், அதிகமான மனவெழுச்சியை வெளிப்படுத்தல் மற்றும் பிறரது செல்வாக்கை சுலபமாக பெறுதல் போன்ற பண்பு பெற்றிருப்பர். தன்னுணர்வு,சுய விருப்பம் மற்றும் தேவைகள் நிறைவேற்ற விடாமுயற்சியை கையாளும் நடத்தை பெற்றிருத்தல்.

அடையாளம் காணுதல் மற்றும் அறிகுறிகள்[தொகு]

   நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் பொதுவாக சமூகத்திலும்,பணியிலும் அதிக செயல் திறனுடையோராக இருப்பார்கள்.சமூகத் திறன் அதிகம் பெற்றவர்களாகவும்,அனைவரின் கவனத்தை ஈர்க்கும் திறனையும் பெற்றிருப்பார்கள். நடிப்புத் திறன் ஆளுமைக் குறைபாடு தனி நபரின் சமூக மற்றும் பிறர்வசம் அன்பு வசப்படும் திறன்,தோல்வியை சமாளிக்கும் சூழ்நிலை போன்றவற்றை பாதிக்கிறது. அன்பு வசப்படுதல் முடிவு பெற்றால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு மருத்துவ ரீதியான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Histrionic_personality_disorder