உள்ளடக்கத்துக்குச் செல்

நடராஜன் சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நடராஜன் சுப்ரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என். நடராஜன் சுப்ரமணியம்
பிறப்புநடராஜன் சுப்ரமணியம்
பரமக்குடி
தமிழ் நாடு
 இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
நடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 – தற்சமயம்

நடராஜன் சுப்ரமணியம் (ஆங்கிலம்:Natarajan Subramaniam) நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

வரலாறு

[தொகு]

நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் தமிழ் நாடு, இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.[1] மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜே, இந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார்.[2]

திரைப்பட வரலாறு

[தொகு]

ஒளிப்பதிவாளராக

[தொகு]
ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
1999லாஸ்ட் டிரைன் டூ மகாகாளிஇந்திகுறும்படம்
2002யூத்தமிழ்தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகம்
2003பாஞ்ச்இந்திஇந்தித் திரைப்படத்தில் அறிமுகம்
வெளியிடப்படவில்லை
2004பிளாக் பிரைடே
2005பரிணீதா
2007ஏகல்ய்வா: தி ராயல் கார்ட்
ஜப் வீ மெட்
2008ஃபிர் கபி
ஹல்லா போல்
கோல்மால் ரிட்டர்ன்ஸ்
2009அன்பு ஆஜ் கல்
2010லாஃபங்கே பரிண்டே
நாக் அவுட்
2011டெசி பாய்ஸ்
2012துப்பாக்கி (திரைப்படம்)தமிழ்"வெண்ணிலவே" பாடலுக்கு மட்டும்
2013ராஞ்சனாஇந்தி
2014ஹாலிடே:எ சோல்சர் இஸ் நெவர் ஆப் டியூட்டி
2015புலிதமிழ்
2016அ ஆ (தெலுங்குத் திரைப்படம்)தெலுங்குதெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகம்
2017மை ஸ்டோரிமலையாளம்
2018சல் மோகன் ரங்காதெலுங்கு

நடிகராக

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பங்குகுறிப்புகள்
2002யூத்வாடிக்கையாளர்அங்கீகரிக்கப்படாத தோற்றம்
2006நாளைநட்டி
2008சக்கர வியூகம்கண்ணா
2010மிளகா (திரைப்படம்)அழகர்
2011முத்துக்கு முத்தாக (திரைப்படம்)ராமன்
2014சதுரங்க வேட்டைகாந்தி பாபு
2014ஜீவாபாரில் இருக்கும் மனிதர்ஒரு ரோசா பாடலுக்கான சிறப்புத் தோற்றம்
2015கதம் கதம்இன்ஸ்பெக்டர் பாண்டியன்
2017என்கிட்ட மோதாதேரவி
2017போங்குதேவா
2017ரிச்சிசெல்வா
2019நம்ம வீட்டு பிள்ளைஅய்யனார்
2020சண்டிமுனிசண்டிமுனி
2020காட் பாதர்அதியமான்
2020வால்டர்அர்ஜூன் சம்பத்
2021கர்ணன்எஸ்பி கண்ணபிரான்
2021இன்பினிட்டிசிபிஐ ஆபிசர்Filming[3]

ஆதாரம்

[தொகு]
  1. "I love the action masala films: Natrajan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-07-23. Retrieved மார்ச் 8, 2013.
  2. "இந்தியில் மறு ஆக்கம் ஆகும் மிளகா". தினமணி. Retrieved மார்ச் 8, 2013.
  3. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/natty-plays-a-cbi-officer-in-his-next/articleshow/78424821.cms

வெளியிணைப்பு

[தொகு]

பன்னாட்டு திரைப்பட தரவுதளத்தில்(imdb) நடராஜன் சுப்பிரமணியம் பற்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடராஜன்_சுப்பிரமணியம்&oldid=4388504" இலிருந்து மீள்விக்கப்பட்டது