நடராசன் சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடராசா சந்திரசேகரன்
N. Chandrasekaran CEO Tata Consultancy Services.jpg
பிறப்பு1963
மோகனூர், நாமக்கல், தமிழ் நாடு, இந்தியா
கல்விBSc.Applied Science.,MCA
படித்த கல்வி நிறுவனங்கள்கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
பணிடாட்டா குழுமத்தின் புதிய தலைவர்
வாழ்க்கைத்
துணை
லலிதா
பிள்ளைகள்பிரணவ் (மகன்)

நடராசன் சந்திரசேகரன் (பிறப்பு: 2 யூன் 1963)[1] என்பவர் டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சனவரி 12, 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் செயல் தலைவராகச் செயல்பட்டார்.[2] இவர் மோகனூரில் பிறந்தவர், தற்போது மும்பையில் வசிக்கிறார். இவரது தந்தை எசு. நடராசன், தாய் மீனாட்சி [3]. இவரின் நடு அண்ணன் கணபதி சுப்பிரமணியம் டாட்டா கன்சல்டன்சி சர்வீசில் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூத்த அண்ணன் சீனிவாசன் முருகப்பா குழுமத்தில் நிதித்துறை இயக்குநராக உள்ளார்.[4] கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார் (பொறியியல் அல்ல). இவர் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்று உடனே 1987 ஆம் ஆண்டு டாட்டா கன்சல்டன்சி சர்வீசசு நிறுவனத்தில் சேர்ந்தார்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. TCS' Chandrasekaran named Tata Sons Chairman
  2. Lee, K.P. (29 September 2008). "TCS: Eyeing Strategic Acquisitions". தி வால் ஸ்டீர்ட் ஜர்னல். http://online.wsj.com/article/SB125420515330748579.html. பார்த்த நாள்: 4 October 2009. 
  3. "டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு". தினமலர். சனவரி 16, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Three brothers from TN dominate corporate India: In top positions at Tata, TCS, Murugappa". திநியூசுமினிட். சனவரி 13, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "N Chandrasekaran Appointed Additional Director On Tata Steel Board". என்டிடிவி. சனவரி 13, 2017 அன்று பார்க்கப்பட்டது.